news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தென்மேற்கு லெபனான் மீது தரைதாக்குதல் - இஸ்ரேல்

08 Oct, 2024
தென்மேற்கு லெபனானில் தரைதாக்குதலை ஆரம்பித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பகுதிக்கு மேலும் படையினரை அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை முன்னெடுப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30 திகதி தென்லெபனான் மீது தரைதாக்குதலை ஆரம்பித்திருந்த இஸ்ரேல் கிழக்கு பகுதியிலேயே கவனம் செலுத்தி வந்தது. இதேவேளை லெபனானிலிருந்து 25 ரொக்கட்கள் இன்று ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சில ரொக்கட்கள் இடைமறிக்கப்பட்டன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!