தெமட்டகொடை வீடொன்றிலிருந்து 5 கோடியே 80 இலட்சம் பணம் கைப்பற்றல்
தெமட்டகொடையில் வீடொன்றில் இருந்து 140,000 அமெரிக்க டொலர் உள்ளிட்ட 5 கோடியே 80 இலட்சத்திற்கும் அதிகத் தொகை பணத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு வடக்கு பிராந்திய விசேட வீதித்தடுப்பு பொலிஸ் வீதித்தடை பிரிவு அதிகாரிகள் முன்னெடுத்த சுற்றிவளைப்பிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் வசமிருந்த 4 கிராம் நிறையுடைய ஹெரோயினும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
55 வயதுடைய சந்தேகநபர் இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!