மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
25 Oct, 2026
''தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை'' நடைமுறைக்கு வந்ததன் பின்னரே சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படும்.
தேசிய எரிபொருள் அனுமதி பத்திரத்திற்கான QR குறியீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு http://fuelpass.gov.lk என்ற இணையதளத்திற்குள் பிரவேசித்து , தமது வாகனங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் சீராகும் வரை பேரூந்து, புகையிரதங்கள் தவிர்ந்த பொதுப் போக்குவரத்தில் ஈடுபடாத எந்தவொரு தனிப்பட்ட வாகனத்திற்கும் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே எரிபொருள் விநியோகிக்கப்படும்.
தேசிய அடையாள அட்டை , கடவுச்சீட்டு இலக்கம், வர்த்தக அல்லது வியாபார பதிவு இலக்கம் என்பவற்றைக் கொண்டு வாகனங்களை பதிவு செய்ய முடியும். ஒரு வாகனத்திற்கு ஒரு QR குறியீடு மாத்திரமே வழங்கப்படும்.
தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நடைமுறைக்கு வரும் வரை லங்கா ஐ.ஓ.சி. வழமை போன்று எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!