news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தேநீர் அருந்திக்கொண்டிருந்த வங்கி உத்தியோகத்தர் திடீரென உயிரிழந்தார்!

24 Dec, 2023
இலங்கை வங்கி உத்தியோகத்தர் ஒருவர் தேநீர் அருந்திக்கொண்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த சம்பவம் வடமராட்சி பகுதியில் நேற்று சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளது. இதில் தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த 41 வயதுடைய வங்கி உத்தியோகத்தரே உயிரிழந்தவராவார். ஒட்டுசுட்டான் இலங்கை வங்கிக் கிளையில் நிறைவேற்று உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் அவர், கொடிகாமம் பகுதியில் தேநீர் அருந்திக்கொண்டிருந்ததாகவும், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு முச்சக்கரவண்டியில் மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும்போது அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இவரது மரணம் தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி இன்று ஞாயிற்றுக்கிழமை (24) விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!