news@ilakkiyainfo.com

பிரிவுகள்

தேவர் மகன் ரேவதி, படையப்பா நீலாம்பரி நான் நடிக்க வேண்டிய கேரக்டர்; இந்த படம் எனக்கு லக்கி: மனம் திறந்த மீனா

20 Feb, 2026
கமல்ஹாசனுடன் அவ்வை சண்முகி, ரஜினியுடன் முத்து, வீரா, எஜமான் என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட சில படங்களில் அவருக்கு மகளாவும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும்கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் முக்கிய வெற்றிப்படமாக இருக்கும் தேவர் மகன், ரஜினிகாந்தின் திரை பயணத்தின் வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கும் படையப்பா ஆகிய இரு படங்களையும் மிஸ் செய்தது தனக்கு வருத்தமாக இருந்தாலும் அதை பாசிட்டீவாக எடுத்துக்கொண்டேன் என மீனா கூறியுள்ளார். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள மீனா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அனைத்து சூப்பர் ஸ்டார் நடிகர்களுடனும் குழந்தை நட்சத்திரமாகவும் ஜோடியாகவும் நடித்துள்ளார். அந்த வகையில், கமல்ஹாசனுடன் அவ்வை சண்முகி, ரஜினியுடன் முத்து, வீரா, எஜமான் என பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அன்புள்ள ரஜினிகாந்த், எங்கேயோ கேட்ட குரல் உள்ளிட்ட சில படங்களில் அவருக்கு மகளாவும் நடித்துள்ளார். இதனிடையே கடந்த 1992-ம் ஆண்டு கமல்ஹாசன் கதை திரைக்கதை எழுதி ஹீரோவாக நடித்திருந்த தேவர் மகன் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் மீனா தான். இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக கெளதமி மற்றும் ரேவதி ஆகியோர் நடித்திருந்தனர். அதில் ரேவதி நடித்த பஞ்சவர்ணம் கேரக்டர் இன்றளவும் அவருக்கு ஒரு மைல்கல் கேரக்டராக அமைந்திருக்கிறது. குறிப்பாக கமல்ஹாசன் உடன் அவர் ரொமான்ஸ் செய்யும் இஞ்சி இடுப்பழகி பாடல் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் நடிகை மீனா தான். படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகி பாடல் கூட அவருக்கான எழுதியது தான். ஆனால், அவருக்கு கிராமத்து லுக் செட் ஆகவில்லை. ரொம்ப இளமையாக இருப்பதாக கூறி, வேறு நடிகையை தேர்வு செய்துள்ளனர். அப்படி படத்தில் இணைந்தவர் தான் ரேவதி. ஆனால் மீனாவுக்காக எழுதிய இஞ்சி இடுப்பழகி பாடல் ரேவதி நடிப்பில் படமாக்கப்பட்டது. இன்றைக்கும் அந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தயாரித்து நடித்த படம் படையப்பா. இந்த படத்தில் சௌந்தர்யா ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், படத்தின் பவர்ஃபுல் கேக்டர் என்றால் அது ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கேரக்டர் தான். இந்த கேரக்டரில் நான் தான் நடிப்பேன் என்று மீனா ஒரு கட்டத்தில் அடம் பிடித்துள்ளார். ஆனால் படக்குழுவினர் முடியாது என்று சொல்லி, சௌந்தர்யா நடித்த கேரக்டரில் நடிக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் மீனா அந்த கேரக்டரை மறுத்துள்ளார். அதன்பிறகு, ரம்யா கிருஷ்ணன் நடிக்க அந்த படம் படமாக்கப்பட்டது. இந்த படமும் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த இரு படங்களும் மிஸ் ஆனது குறித்து வருத்தம் தெரிவித்த மீனா, இந்த படங்களில் நடிக்காதது வருத்தம் தான். ஆனால் நான் நினைப்பது எதுவும் நடந்துவிடாது. நினைத்தது நடக்கவில்லை என்றால் அதையே நினைத்து கொண்டு இருக்காமல் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட வேண்டும். நான் மிஸ் பண்ண கேரக்டரில் நடித்த ரேவதி, ரம்யா கிருஷ்ணன் இருவருமே சூப்பராக நடித்திருக்கிறார்கள். பாகுபலி படம் வந்தபோது ரமயா கிருஷ்ணன் எனக்கு கால் செய்தார். அப்போது அவரை ராஜாமாதா என்று தான் கூப்பிட்டேன். பாகுபலி படத்தில் ரம்யா கிருஷ்ணன் சிறப்பாக நடித்திருந்தார். தேவர் மகன், படையப்பா ஆகிய படங்கள் எனக்கு மிஸ் ஆகி இருந்தாலும், அர்ஜூனுடன் நடித்த ரிதம் படம் எனக்கு பெரிய லக்கி தான். அதேபோல் பாளையத்து அம்மன் படம் நடிக்கும்போது மேக்கப் போட பெரிய சிரமமாக இருந்தது. அசைவம் சாப்பிடாமல் நடித்தேன். இப்போது அந்த பாடல்கள் கேட்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என மீனா கூறியுள்ளார்

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!