இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
பழைய உளவு தகவல்களால் தவறுதலாக ராணுவ தளத்திற்கு பதிலாக அருகில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அமெரிக்க ராணுவம் உள் விசாரணை நடத்தி வருகிறது. இந்த பழைய உளவு தகவலை ஏஐ தான் வழங்கியதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஒருவேளை ஏஐ வழங்கிய தவறான தகவலால் இந்த தாக்குதல் நடந்திருந்தால் இது மனித குலத்திற்கே முக்கிய எச்சரிக்கை மணியாக இருக்கும்.
இதற்கிடையே டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க ராணுவத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த முயன்று வருகிறது.
தனது ஏஐ மாடல்களை தானியங்கி ஆயுதங்களாகவோ அல்லது உளவு வேலைகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என்று ஆந்த்ரோபிக் நிறுவனம் பிடிவாதம் காட்டியது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தை Supply Chain Risk என டிரம்ப் நிர்வாகம் பட்டியலிட்டது. அந்த ஒப்பந்தத்தை ஓபன் ஏஐ கைப்பற்றியது.
இதற்கிடையே ராணுவத்தில் கட்டுப்பாடற்ற முறையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்துச் சீனா எச்சரித்துள்ளது.
சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் பின் கூறுகையில், மற்ற நாடுகளின் இறையாண்மையை மீற AI-ஐப் பயன்படுத்துவது, மரணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை அல்காரிதம்களிடம் கொடுப்பது தார்மீக ரீதியான சிதைவாகும்.
இந்த நிலை தொடர்ந்தால், 'டெர்மினேட்டர்'(Terminato) திரைப்படத்தில் வருவது போல இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிராகத் திரும்பி, உலகம் அழியும் சூழல் நிஜமாகிவிடும்" என்று எச்சரித்தார். ",
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!