தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கத் தவறிய மனைவியின் மூக்கைக் கடித்து உண்ட கணவர் சீனாவில் சம்பவம்
தனது தொலைபேசி அழைப்புக்கு மனைவி பதிலளிக்கத் தவறியதால் சினமடைந்த கணவர் ஒருவர், மனைவியின் மூக்கைக் கடித்துத் துண்டித்து உண்ட விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு சீனாவில் ஷாங்டொங் மாகாண த்தைச் சேர்ந்த யாங் என்ற பெண்ணே தனது கணவரின் சினத்துக்கு உள்ளாகி தனது மூக்கை இழந்துள்ளார்.
யாங் சம்பவ தினம் இரவு வேலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் அதிகாலை 2.00 மணியள வில் அவரது கணவர் அவருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இதன்போது யாங் ஆஜராகி தொலைபேசியை எடுக்கத் தவறியதால் சினமடைந்த கணவர் பொழுது விடிந்ததும் மனைவி பணியாற்றிய நிறுவனத்தின் அலுவலகத்துக்குள் பிரவேசித்து, ஏன் தனது தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என சினத்துடன் வினவியவாறு யாங்கின் தலையை சுவருடன் அழுத்திப் பிடித்து அவரது மூக்கைக் கடித்துத் துண்டாக்கி விழுங்கியுள்ளார்.
இதனையடுத்து யாங் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அவர் தனது மூக்கை முழுமையாக இழந்துள்ளதால் அவரது சுவாச செயன்முறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு பிரதான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
யாங்கும் அவரது கணவரும் தமது முந்திய வாழ்க்கைத் துணைகளை விவாகரத்துச் செய்தே திருமண பந்தத்தில் இணைந்திருந்தனர்.
இந்நிலையில் யாங்கிற்கும் தனக்கும் புதிதாகப் பிறந்த குழந்தையை விற்று விட்டு, தனது பேரப்பிள்ளைகளை யாங் பராமரிக்க வேண்டும் என அவரது கணவர் அவரை நிர்ப்பந்தித்து வந்துள்ளார்.
தனது மனைவியின் மூக்கைக் கடித்து உண்டு விட்டு தலைமறைவாகியுள்ள கண வரை பொலிஸார் வலைவீசித் தேடி வரு கின்றனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!