உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
சனா சோனல்
அரசு ஊழியரான சனாவுக்கு, 2017-ம் ஆண்டு அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட குடியிருப்பு கிடைத்தது. அதில் வசித்து வந்த சனாவுடன் சேர்ந்து வாழ, அவரின் தோழியான சோனல் முடிவு செய்தார்.
வாழ்க்கையில் இருவரும் இணைபிரியாமல் வாழவேண்டுமென்று முடிவெடுத்தனர். எனவே, பாலின அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறி, திருமணம் செய்து கொள்வது என்று சனா தீர்மானித்தார்.
அதன் தொடர்ச்சியாக, டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு இருவரும் சென்றனர்.
அங்கு நடைபெற்ற பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கான பரிசோதனையில், சனாவுக்கு உடற்தகுதிச் சான்று கிடைத்தது.
இதையடுத்து, 2020-ம் ஆண்டு ஜூனில் சனாவுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அதன் பின்னர், சனா தனது பெயரை அதிகாரபூர்வமாக சோஹைல்கான் என்று மாற்றிக் கொண்டார். பின்னர் கணவன்- மனைவியாக இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடங்கினர்.
அத்துடன் அரசு ஊழியராக சனா வேலைக்குப் போவதால், தானும் வேலைக்குச் செல்ல வேண்டுமென்று கருதிய சோனல், மருத்துவமனை ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார்.
நாள்கள் செல்லச்செல்ல, சோனாவின் போக்கில் மாற்றங்கள் உண்டாயின. சனாவை கண்டுகொள்ளாமல் சோனல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி சனா கேட்டபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகே, மருத்துவமனையில் உள்ள கியான் என்பவரை சோனல் காதலித்து வந்தது தெரிய வந்தது.
பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிய சனாவுக்கு, சோனலின் இந்த முடிவு கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. இதனிடையே, சனாவை பிரிந்த சோனல், தன் காதலர் கியானுடன் சென்றார்.
மேலும், சனாவால் தனக்குப் பிரச்னை வரக்கூடாது என்று எண்ணி, காவல்துறையில் சோனல் புகார் அளித்தார்.
தனக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு, நீதிமன்றத்தை நாடியுள்ளார் சனா. இவ்வழக்கில் நீதிமன்றம் சம்மன் அனுப்பியும் சோனல் ஆஜாராகவில்லை.
இதையடுத்து ஜனவரி 18-ம் தேதி, சோனலை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது அவர் ஜாமீனில் விடப்பட்டுள்ளார். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, வரும் பிப்ரவரி 23-ம் தேதி நடைபெற உள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!