news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நயினாதீவில் பலத்த காற்று: மினி சூறாவளியால் இறங்கு துறை கொட்டகைகள் சேதம்

20 Mar, 2026
நயினாதீவில் வீசிய மினி சூறாவளியால் இறங்கு துறை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தகர கொட்டகை தூக்கி வீசப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் சீரற்ற கால நிலைமை காணப்படுவதனால் , யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (20) காலை மழை பெய்திருந்தது. அந்நிலையில் தீவக பகுதியில் பலத்த காற்றும் வீசி வருவதனால், தீவகத்திற்கான படகு சேவைகள் தாமதப்பட்டுள்ளது. அதேவேளை, நயினாதீவு பகுதியில் வீசிய காற்றினால் நயினாதீவு இறங்கு துறை பகுதியில் பக்தர்களின் நலன் கருதி அமைக்கப்பட்டிருந்த நிழற் கொட்டகைகள் சேதமடைந்துள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!