இரான் போரால்தான் குடியரசுக் கட்சி தோல்வியை சந்தித்தது' - ஜே.டி. வான்ஸ் கருத்துக்கு டிரம்ப் பதில் என்ன?
05 Nov, 2026
புதையல் கிடைக்க வேண்டும் மற்றும் சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக மந்திரவாதி ஒருவரின் பேச்சைக் கேட்டு 13 வயது மகளை தந்தையே நரபலி கொடுத்த சம்பவம் புதுக்கோட்டையில் நிகழ்ந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்த பன்னீர் கட்டட வேலை செய்து வருகிறார். இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி இந்திராவுக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இரண்டாவது மனைவி மூக்காயிக்கு இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த மே 18ஆம் தேதி பன்னீரின் முதல் மனைவியான இந்திராவின் இளைய மகள் வித்யா (13) அருகில் உள்ள பிடாரி கோவில் குளத்தில் தண்ணீர் எடுக்க சென்றார். வெகுநேரமாகியும் அவரைக் காணாததால் பெற்றோரும் உறவினர்களும் வித்யாவைத் தேடினர்.சிறுமி கொலை செய்யப்பட்டது எப்படி?
அப்போது பாப்பான்குளம் அருகேயுள்ள தைல மரக்காட்டு பகுதியில் வித்யா ஆடைகள் கிழிந்த நிலையில், முகத்தில் காயத்துடன், கழுத்து இறுக்கப்பட்டு மயங்கி கிடந்துள்ளார்.
கொலைக்கு உடந்தையாக இருந்த உறவினர் குமார் இரண்டாவது மனைவி மர்ம மரணம்
இதனிடையே வித்யாவை நரபலி கொடுக்க உடந்தையாக இருந்த பன்னீரின் இரண்டாவது மனைவி மூக்காயி வடுகவயலில் உள்ள தனது அம்மா வீட்டில் கடந்த மே 31 அன்று மர்மமான முறையில் இறந்துள்ளார். மூக்காயின் மரணம் குறித்தும், உடையாளிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது என்பது குறித்து புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் விரிவாக பேசினார். "பன்னீர் தனது வறுமை மற்றும் பண ஆசை காரணமாக மந்திரவாதியான வசந்தியிடம் ஆலோசனை கேட்டுள்ளார். அப்போது மந்திரவாதி 'உன் மகளை நரபலி கொடுத்தால் உனக்கு பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும், புதையல் கிடைக்கும், செல்வாக்கு பெருகும்' எனக் கூறியதால் அதனை நம்பி மகளை நரபலி கொடுக்க திட்டமிட்டுள்ளார்."'பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும்'
"கடந்த மே மாதம் 17ம் தேதி நள்ளிரவு பிடாரி அம்மன் கோயில் அருகே பூஜை செய்துள்ளனர். மறுநாள் காலை 7 மணியளவில் பன்னீர் தனது இரு மகள்களிடம் பிடாரி அம்மன் கோயிலுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும்படி கூறியுள்ளார். எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இளைய மகள் வித்யா 'அக்கா நீ வர வேண்டாம் வீட்டில் இரு, நான் போய் தண்ணீர் எடுத்து விட்டு வருகிறேன்' என சொல்லி விட்டு குடத்துடன் சென்றுள்ளார்." "சிறுமியை பின் தொடர்ந்து சென்ற பன்னீர், தனியாக பேச வேண்டும் என்று தைல மரக்காட்டின் அடர்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுமி தண்ணீர் சுமக்க கொண்டு வந்த துண்டால் கழுத்தை நெரித்துள்ளார். அப்போது அந்த காட்டில் மறைந்திருந்த பன்னீரின் உறவினர் குமார், பன்னீர் இரண்டாவது மனைவி மூக்காயி, மந்திரவாதி வசந்தி, ஆகியோர் சிறுமியின் கை, கால்களை இறுக்கமாக பிடித்து மூச்சு திணற செய்துள்ளனர்."
நள்ளிரவு பூஜை நடந்த பிடாரி அம்மன் கோயில் மற்றும் அதன் அருகே உள்ள குளம்
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் 'மந்திரவாதிகள் மனநோயாளிகள்'
நரபலி சம்பவம் குறித்து சென்னையை சேர்ந்த மன நல மருத்துவர் சிவபாலன் பிபிசி தமிழிடம், "அந்த சிறுமியின் தந்தை யாரை பற்றியும் கவலைப்படாமல், தன்னை பற்றி மட்டுமே யோசிக்கும் ஒரு சுய நலவாதியாகத் தான் இருந்திருப்பார், தனது பிரச்சனை சரியாக வேண்டும் என்பதற்காக பெற்ற குழந்தைகளை கூட கொலை செய்ய தயாராகியுள்ளார் என்றால் அவர் ஆளுமையற்றவர் என்பது தெரிய வருகிறது. இவர் இந்த கொலையை நீண்ட நாட்களாய் திட்டமிட்டுத்தான் செய்து இருக்க வேண்டும்." "இப்படியான மன நிலையில் உள்ளவர்களை கண்டுபிடிப்பது சிரமம் ஆனால் அவர்களுடன் மிக நெருக்கமாக இருப்பவர்கள் மட்டும் இதனை எளிதில் கண்டுபிடித்து விடலாம்," என்று கூறினார். மந்திரவாதி வசந்தி நிச்சயம் ஒரு மனநோயாளி காரணம் மூட நம்பிக்கையால் இல்லாத ஒன்றை இருப்பதாக நம்பி, ஒரு கட்டத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவராகவே மாறிவிடுகிறார்கள். மக்களின் மூட நம்பிக்கையை முதலாக்கி பேய், பூதம், புதையல் என மோசடி செய்துவரும் மந்திரவாதிகளை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் மன நல மருத்துவர் சிவபாலன்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!