நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலைகள் ரூ. 201, ரூ. 80, ரூ. 38 இனால் குறைப்பு
இன்று நள்ளிரவு (06) முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைக்கப்படுவதாக, அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.
அதற்கமைய,
- 12.5kg சிலிண்டர்: ரூ. 201 இனால் குறைப்பு
- 5kg சிலிண்டர்: ரூ. 80 இனால் குறைப்பு
- 2.3kg சிலிண்டர்: ரூ. 38 இனால் குறைப்பு
விலைச்சூத்திரத்திற்கு அமைய இவ்வாறு விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்:
12.5kg: ரூ. 4,610 இலிருந்து ரூ. 4,409 ஆக ரூ. 201 இனால் குறைப்பு
5kg: ரூ. ரூ. 1,850 இலிருந்து ரூ. 1,770 ஆக ரூ. 80 இனால் குறைப்பு
2.3kg: ரூ. 860 இலிருந்து ரூ. 822 ஆக ரூ. 38 இனால் குறைப்பு
இதற்கிடையில் கடந்த டிசம்பர் 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
12.5kg: ரூ. 4,360 இலிருந்து ரூ. 4,610 ஆக ரூ. 250 இனால் அதிகரிப்பு
5kg: ரூ. ரூ. 1,750 இலிருந்து ரூ. 1,850 ஆக ரூ. 100 இனால் அதிகரிப்பு
2.3kg: ரூ. 815 இலிருந்து ரூ. 860 ஆக ரூ. 45 இனால் அதிகரிப்பு
அதற்கு முன்னர் கடந்த நவம்பர் 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
12.5kg: ரூ. 4,280 இலிருந்து ரூ. 4,360 ஆக ரூ. 80 இனால் அதிகரிப்பு
5kg: ரூ. ரூ. 1,720 இலிருந்து ரூ. 1,750 ஆக ரூ. 30 இனால் அதிகரிப்பு
2.3kg: ரூ. 800 இலிருந்து ரூ. 815 ஆக ரூ. 15 இனால் அதிகரிப்பு
லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இறுதியாக பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன
12.5kg: ரூ. 5,800 இலிருந்து ரூ. 5,300 ஆக ரூ. 500 இனால் குறைப்பு
5kg: ரூ. 2,320 இலிருந்து ரூ. 2,120 ஆக ரூ. 200 இனால் குறைப்பு
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!