news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாடளாவிய ரீதியில் திடீர் மின் வெட்டுக்கு குரங்குதான் காரணம் - மின் மற்றும் எரிசக்தி அமைச்சர்

09 Feb, 2025
பாணந்துறையிலுள்ள மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியதால் நாடு முழுவதும் மின் வெட்டு ஏற்பட்டுள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மின் விநியோகத்தில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று ஞாயிற்றுக்கிழமை (09) முற்பகல் 11.23 மணி அளவில் திடீர் மின் வெட்டு ஏற்பட்டது. மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!