news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்டில் இன்று 400இற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

03 Nov, 2020
நாட்டில் இன்று 409 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் எட்டுப் பேர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதுடன் ஏனைய 401 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் என இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார். அதன்படி, மினுவங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாயிரத்து 266ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11ஆயிரத்து 744ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து இதுவரை ஐயாயிரத்து 581 பேர் குணமடைந்துள்ள நிலையில் இன்னும் ஆறாயிரத்து 142 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!