news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு: மொத்த பாதிப்பு 24,000ஐ கடந்தது மரணங்கள் 122 ஆக அதிகரிப்பு !

01 Dec, 2020
நாட்டில் மேலும் 268 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்து 710 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 24 ஆயிரத்து 255ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 257 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 17 ஆயிரத்து 817 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 320 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, நாட்டில் இதுவரை 122 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!