news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்டில் கொரோனா பாதிப்பு 41,000ஐ கடந்தது!  மேலும் நால்வர்  உயிரிழப்பு!

27 Dec, 2020
நாட்டில்  இன்று மட்டும் 668 பேருக்கு தொற்று கண்டறியப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 48ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 650 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 32 ஆயிரத்து 701 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இன்னும் எட்டாயிரத்து 160 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 191ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு இன்று அறிவிக்கப்பட்டுள்ள இறந்தவர்களின் எண்ணிக்கையில் நேற்று உயிரிழந்த 52 வயதுடைய வவுனியாவைச் சேர்ந்த பெண்ணும் உள்ளடங்குகின்றார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!