news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

30 Dec, 2020
நாட்டில் மேலும் 354 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42ஆயிரத்து 717 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 698 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 34 ஆயிரத்து 623 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இன்னும் ஏழாயிரத்து 599 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 199 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!