இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
"எங்களை தாக்கியவர்கள் மற்றும் எதிரிகளின் போர் விமானங்களை எங்களின் படைகள் அழித்தன" எனவும் அவர் கூறினார். இந்திய விமானங்களை பாகிஸ்தான் படைகள் சுட்டு வீழ்த்தியதாக மீண்டும் அவர் குறிப்பிட்டார், ஆனால் இதுகுறித்து இந்தியா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.
மேலும் பேசிய அவர், "பாகிஸ்தான் மக்களே, உங்களின் சொந்த பாதுகாப்புக்காக மக்களும் ராணுவமும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நாம் நிச்சயமாக அவர்களுக்கு எதிராக (இந்தியாவுக்கு) நின்று வெற்றி பெறுவோம்."
நாட்டின் பாதுகாப்புக்காக, பாகிஸ்தான் மக்களின் தைரியம் தனக்கு தேவை எனக்கூறி அவர் தன் உரையை முடித்தார். "ஏனெனில் நாம் உண்மைக்காக போராடுகிறோம், கடவுள் நம்முடன் எப்போதும் உடன் நிற்பார் என நம்புகிறேன்."
"பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று இந்தியா இன்று அதிகாலை அறிவித்தது.
"பஹல்காமில் 26 அப்பாவி உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல்களைத் திட்டமிட்ட மற்றும் நடத்திய பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் எனும் துல்லிய தாக்குதலில், ஒன்பது இலக்குகள் குறிவைத்து தாக்கப்பட்டன" என இந்தியா கூறியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாகவும் 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டதாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்திய ராணுவத்தின் தாக்குதலில் பொது மக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று இந்திய அரசு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!