சட்டத்தின் முன் சரணடையும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம்;கம்பி எண்ணப்போகும் ராஜபக்ஸ குடும்பத்தினர்
18 Sep, 2026
கேள்வி: ஒரு நாட்டின் வருமானத்துக்கு வரி வருமானம் முக்கிய காரணியாகும். நாங்கள் எங்கள் பல்கலைக்கழக ஆய்வுகளில் தொழில்முனைவோர் ஆலோசனைகள் மற்றும் தொழில்முனைவு பற்றி கற்கிறோம். ஆனால், ஜனாதிபதி அவர்களே, அது நடைமுறையில் செயற்படுத்தப்படுவதில்லை. எனவே, தொழில் முனைவோர் நடவடிக்கைகளுக்கான மாணவர்களின் ஆலோசனைகளை உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பதில்: அத்தகைய வட்டத்தை உங்கள் பீடத்தில் நிறுவி, எமது பொருளாதார விவகாரம் தொடர்பான குழுவுடன் நேரடியாக இணைய முடியும்.
கேள்வி: ஜனாதிபதி அவர்களே, இத்திட்டம் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஊக்கமளித்தால், அது மிகவும் பொருத்தமானது என்பதைக் கூற வேண்டும்.
பதில்: பல்கலைக்கழக மாணவர்கள் குழுக்கள் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு திறைசேரிக்குச் சென்று அது எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து கற்கலாம்.
கேள்வி: பல்கலைக்கழக மாணவர்கள் ஆங்கில மொழியில் தமது கல்வியைத் தொடர்வதில் பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில், எமது பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் கல்வி கற்க வேண்டியதன் காரணமாக தற்கொலைச் சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது. எனவே, அடிப்படை நிலையிலிருந்து மாணவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த ஏற்பாடு செய்ய முடியுமா?
பதில்: கொழும்பு பல்கலைக்கழகத்தில் அவ்வாறான பிரச்சினை இல்லை என நான் நினைக்கிறேன். மொரட்டுவ பல்கலைக்கழகத்திலும் அவ்வாறானதொரு பிரச்சினை எழவில்லை. ஆனால், நீங்கள் அனைவரும் ஆங்கிலம் கற்க வேண்டும். ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழி. நீங்கள் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பத்துடன் செயற்பட வேண்டுமென்றால், ஆங்கில அறிவு அவசியம். அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா, இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் ஆங்கில மொழியில் பணிகளை மேற்கொள்கின்றன. எதிர்காலத்தில் சீனாவும் இந்த வழிமுறையைப் பின்பற்றும்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவது கட்டாயமாகியுள்ளது.
அதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மூலமாகவும் தேவைப்பட்டால், பிரிட்டிஷ் கவுன்சில் போன்ற நிறுவனங்கள் மூலம் அதற்கான வசதிகளை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம்.
கேள்வி: ஜனாதிபதி அவர்களே, ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடிப்பதற்கு செலவழித்த காலத்தை விட, ஒரு அரச பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவன் பட்டப்படிப்பை முடிப்பதற்கான கல்வித் தகுதிகளை பெறச் செலவழிக்கும் காலம் மிக அதிகம். எனவே, நாம் தொழில் சந்தைக்குச் செல்லும்போது, அவர்களுக்கு நம்மை விட அதிக அனுபவம் கிடைக்கிறது. இதற்கு உங்கள் பரிந்துரை என்ன?
பதில் : நான் ஒரு அரச பல்கலைக்கழகத்தில் படித்தேன். நான் 18 வயதில் பல்கலைக்கழக கல்வியைத் தொடங்கி 21 வயதில் பட்டம் பெற்றேன். 23 வயதில் வழக்கறிஞரானேன்.
இது பல்கலைக்கழகத்தின் உள்ளகப் பிரச்சினை. இன்று சிலர் பல்கலைக்கழக கல்வியை சீர்குலைத்து வருகின்றனர். ஆனால், நாங்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது, முதல் தவணையின் கடைசி இரண்டு வாரங்கள் மட்டுமே வேலைநிறுத்தத்துக்கு ஒதுக்க உபவேந்தருடன் உடன்பாடு ஏற்படுத்திக் கொள்வோம். அவரும் அதற்கு உடன்பட்டார். அவ்வாறே நாமும் நடந்துகொண்டோம். எனவே, நாம் ஒரு முறைமையின் கீழ் செயல்படுவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.
அத்துடன், மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பின்னர், மூன்று அல்லது நான்கு வருடங்களுக்குள் கல்வியை நிறைவு செய்து பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற சட்டத்தை எதிர்காலத்தில் கொண்டு வர எதிர்பார்க்கின்றோம். மருத்துவ பீடங்களுக்கு அது தேவையில்லை.
கேள்வி: ஜனாதிபதி அவர்களே, நான் ஒரு ஆலோசனை முன்வைக்கலாமா? பெரும்பாலும் அரசாங்க பாடசாலைகள் அனைத்தும் ஒரே நாளில் தொடங்கி ஒரே நாளில்தான் நிறைவடைகின்றன. ஏன் அரசாங்க பல்கலைக்கழகங்களால் அதைச் செய்ய முடியாது?
பதில்: பல்கலைக்கழகங்களின் கல்வியாண்டு ஒக்டோபரில் தொடங்குகிறது. அது அடுத்த ஆண்டு செப்டம்பர் 30இல் முடிவடைகிறது. நாங்கள் பல்கலைக்கழகத்தில் இருந்தபோதும், கல்வி ஆண்டு ஒக்டோபரில் தொடங்கியது. பல நாடுகளில், பல்கலைக்கழக கல்வியாண்டு ஒக்டோபர் முதல் செப்டம்பர் வரை செயற்படுத்தப்படுகிறது என்றார்.
இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் விசேட திட்டப் பணிப்பாளர் திக்ஷன அபேவர்தன, ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்ரிய, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, யாழ். பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ். ஸ்ரீ சற்குணராஜா, யாழ். பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் வசந்தி அரசரத்னம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!