உலகின் பாதுகாப்பான 5 நாடுகளில் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒரு பார்வை
11 Aug, 2026
பழங்கால திராவிட கட்டிடக்கலையை பறை சாற்றும் ஓர் அற்புதமான கட்டிடமாக விளங்கிய யாழ். நூலகம் , யாழ்ப்பாணத்துக்கான ஓர் அடையாளமாகவும் திகழ்ந்தது என்பதே உண்மை. அதனை அழிக்க வேண்டும் என்று காத்திருந்த பேரினவாத சக்திகளுக்கு சந்தர்ப்பமும் சாதகமாக அமைந்தது என்றே கூறவேண்டும். அக்கால கட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி நிலவியது .
அப்போது அமைச்சர்களான சிறில் மெத்தியு மற்றும் காமினி திஸாநாயக்க ஆகியோர் யாழ்ப்பாணத்தில் முகாமிட்டிருந்தனர் . இந்த நிலையில் அன்று 1981 மே 31 நள்ளிரவு காடையர் கும்பல் திடீரென யாழ். நூலகம், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையகம் மற்றும் ஈழநாடு நாளிதழின் அலுவலகம் உட்பட யாழ். நகரம் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் நூற்றுக்கும் அதிகமான கடைகள் என்பனவற்றிற்கு தீ வைத்து ருத்ர தாண்டவம் ஆடியது.
சுன்னாகத்திலும் அன்றைய தினம் குறித்த காடையர் கும்பல் தீ வைத்து பெரும் அட்டகாசத்தில் ஈடுபட்டது . இதேவேளை நூலகம் எரிவதை இரு அமைச்சர்களும் யாழ். விருந்தினர் விடுதியில் இருந்து பார்த்துக்கொண்டிருத்ததாகவும், பின்னர் இச்செயல் குடித்த ஒரு சில நபர்களின் வன்முறை என்று கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
அது மாத்திரமின்றி, அப்போது யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய வி.யோகேஸ்வரனின் இல்லமும் தீ வைத்து அழிக்கப்பட்டது. இதேவேளை மறுநாள் ஜூன் முதலாம் திகதி சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட பலரும் , பொலிஸாரும் அரசாங்கத்தின் அனுசரணையுடன் கூடிய சீருடையினரும் சேர்ந்தே யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு தீ வைத்து முற்றாக அழித்ததாக கூறினர் . எனினும் அரசாங்கம் எதனையும் கருத்தில் வாங்கிக்கொள்ளவில்லை .
பின்னர் ஜூன் 2 ஆம் திகதியே அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்தது, அந்த நேரத்தில் முக்கிய இலக்குகள் யாவும் அழிக்கப்பட்டுவிட்டன. அரசாங்கத்தின் காலதாமதமான நடவடிக்கையும் யாழ்ப்பாணம் எரிய காரணமானது என்று மக்கள் கடும் விசனம் தெரிவித்தனர் .
இந்த கொடூர செயல் உலகம் முழுவதும் வாழும் அனைத்து இன மக்களாலும் வெகுவாக விமர்சிக்கப்பட்டது. இனரீதியான தாக்குதல் என்று கடுமையாக விமர்சித்தனர். இந்த கொடூர செயலுக்கு 2016 இல், இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரியிருந்தார் . இருந்த போதிலும் அது ஆழமாக தமிழர் மனங்களில் ஏற்படுத்தியிருக்கும் ரணங்களை மாற்றுமா ? என்று எதிர்பார்க்க முடியாது .
காரணம் தமிழ் மக்களின் கலாசாரங்களை அழித்தொழிக்கும் வகையிலும், இன மோதல்களுக்கு தூபம் இடும் வகையிலும் , வாழ்விடங்களை கபளீகரம் செய்யும் வகையிலும் , பௌத்த மத தலங்களை தமிழர்களின் பூர்வீக காணிகளில் அமைக்கும் வகையிலும் ஆக்கிரமிப்புகள் தொடர்கின்றன. குறிப்பாக வடக்கில் அண்மைய காலமாக திட்டமிட்ட ஒரு பிரிவினரால் இன களுக்கிடையே கலவரத்தை தூண்டி மீண்டும் ஒரு " கருப்பு ஜூலைக்கு " வழி வகுப்பதாக கூறப்படுகின்றது .
நாட்டை மீண்டும் அழிக்கவும், அரசாங்கத்தை உடைக்கவும் சர்வதேச மற்றும் உள்ளூர் சக்திகள் முனைவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறான முயற்சியில் ஈடுபடும் குழுக்களுக்கு வெளிநாடுகள் ஆதரவளித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார் .
இதனிடையே, நாட்டில் மத முரண்பாடுகளை தூண்டும், அமைதியை சீர்குலைக்க எத்தணி க்கும் தனிநபர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை ஒடுக்கவும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும் ஒருபோதும் தயங்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது .
இவை அனைத்துக்கும் மேலாக மக்கள் மத்தியில் இன, மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி அமைதியையும் , சமாதானத்தையும் சீர்குலைப்பதற்கு அரசாங்கம் இனி ஒருபோதும் இடமளிக்காது என அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார் ,
இவ்வாறாக அரச தரப்பினர் கூறி வருகின்ற போதிலும் ஒரு சில கசப்பான சம்பவங்கள் தொடரவே செய்கின்றன. அதனால் இனங்களுக்கிடையே புரிந்துணர்வற்ற தன்மையே மேலோங்கி வருகின்றது . குறிப்பாக, சில அடிப்படை மதவாதிகள் மற்றும் சில கடும் போக்கு கொண்ட பாராளுமன்ற பிரதிநிதிகள், பெரும்பான்மை மக்களை கவரும் வகையிலும், அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலும் மக்களை உசுப்பேற்றிவிடும் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறான போக்குகள் முடிவுக்கு வரும் வரை நாட்டில் இன ரீதியான கசப்புணர்வுகள் மற்றும் மோதல்கள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில் வழங்கப்படும் உறுதிமொழிகள் யாவும் வெறும் கண்துடைப்பாகவே பார்க்க வேண்டியுள்ளதாக தமிழ் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர் .
ஆர். பி . என்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!