news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நாய் குரைத்ததால் வீட்டிலிருந்து வெளியே வந்தவர் பணயமாகப் பிடிக்கப்பட்டார்!

01 Jan, 2020

யாழ். அச்­சு­வேலி பகு­தியில் உள்ள வீடு ஒன்றில் திங்­கட்­கி­ழமை அதி­காலை புகுந்த நபர்கள் 45 பவுண் நகை, 30 ஆயிரம் ரூபா பணம் என்­ப­னவற்றை கொள்­ளை­ய­டித்துச் சென்­றுள்­ளனர்.

குறித்த வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் இடை­வி­டாது குரைத்துக் கொண்­டி­ருந்­த­தை­ய­டுத்து வீட்டின் உரி­மை­யாளர் ஜன்னல் வழி­யாக வெளியே பார்த்­த­போது, வாயில்­க­தவு (கேட்) திறந்த நிலையில் காணப்­பட்­டுள்­ளது.

அதனை­ய­டுத்து வீட்டின் முன் கதவைத் திறந்து வெளியே சென்று கேற்றை பூட்­டு­வ­தற்கு முற்­பட்ட போது, அவ்­வி­டத்தில் மறைந்­தி­ருந்த கொள்­ளை­யர்கள் அவரை ஆயு­த­மு­னையில் மடக்கிப் பிடித்­துள்­ளனர்.

ஐவரைக் கொண்ட இந்தக் குழு­வினர் முகங்­களை துணி­களால் மறைத்துக் கட்டி இருந்­த­துடன் கைகளில் வாள்கள் உள்­ளிட்ட கூரிய ஆயு­தங்­களை வைத்­தி­ருந்­துள்­ளார்கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

rewsaaaஉரி­மை­யா­ளர்­களை பண­ய­மாக வைத்­துக்­கொண்டு வீட்­டுக்குள் சென்ற கொள்­ளை­யர்கள் 45 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபா பணம் என்­ப­னவற்றை கொள்­ளை­யிட்டுத் தப்பி சென்­றுள்­ளனர்.

குறித்த கொள்ளை சம்­பவம் தொடர்பில் அச்­சு­வேலி பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

சம்­பவம் தொடர்பில் பொலிசார் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள்.

அதே­வேளை கடந்த 27ஆம் திகதி சாவ­கச்­சேரி பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட வீட்­டினுள் புகுந்த கொள்­ளை­யர்கள், 47 பவுண் நகை­க­ளையும், ஒரு தொகை பணத்­தையும் கொள்­ளை­யிட்­டுள்­ளனர்.

  28 ஆம் திகதி பருத்­தித்­துறை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தியில் உள்ள வீடு ஒன்றினுள் புகுந்த கொள்­ளை­யர்கள் 24 பவுண் நகை­க­ளையும், ஒரு தொகை பணத்­தி­னையும் கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர்.இவ்வாறாக கடந்த நான்கு நாட்களில் மூன்று வீடுகளில் பாரிய கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!