'இது நம்ம ஸ்டைல்..' இரட்டைச் சதத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியை அலறவிட்ட சுப்மன் கில்.. தொடரை வென்ற இந்தியா!
01 Oct, 2026
ஆனால், அடுத்து ஜோடி சேர்ந்த பக்கார் ஸமானும் பாபர் அஸாமும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத இரண்டாவது விக்கெட்டில் 138 பந்துகளில் 194 ஓட்டங்களைப் பகிர்ந்து டக்வேர்த் லூயிஸ் முறைமையில் பாகிஸ்தானை முன்னிலையில் இட்டு பாகிஸ்தானின் வெற்றியை உறுதிசெய்தனர்.
பக்கார் ஸமான் 81 பந்துகளில் 11 சிக்ஸ்கள், 8 பவுண்டறிகள் உட்பட 126 ஓட்டங்களுடனும் பாபர் அஸாம் 63 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட் 66 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 401 ஓட்டங்களைக் குவித்தது.
டெவன் கொன்வேயும் ரச்சின் ரவீந்த்ராவும் 55 பந்துகளில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
கொன்வே 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து ரவீந்த்ராவும் அணித் தலைவர் கேன் வில்லியம்ஸனும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 141 பந்துகளில் 180 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தை நல்ல நிலையில் இட்டடனர்.
ஆனால், இருவரும் 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.
உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற்று வந்த கேன் வில்லியம்ஸன் தனது மீள்வருகையில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி 79 பந்துகளில் 10 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 95 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
ரச்சின் ரவிந்த்ரா 94 பந்துகளில் 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 108 ஓட்டங்களைக் குவித்தார்.
இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் ரவீந்த்ரா குவித்த 3 சதம் இதுவாகும்.
மத்திய வரிசையில் க்ளென் பிலிப்ஸ் (48 ஓட்டங்கள்), மார்க் செப்மன் (39), டெரில் மிச்செல் (29), மிச்செல் சென்ட்னர் (26 ஆ.இ.) ஆகியோரும் நியூஸிலாந்தின் மொத்த எண்ணிக்கைக்கு தங்களது அதிகப்பட்ச பங்களிப்பை வழங்கியிருந்தனர்.
ஆனால் அவை அனைத்தும் சீரற்ற காலநிலையில் வீண்போயின.
பந்துவீச்சில் மொஹமத் வசிம் 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியை அடுத்து பாகிஸ்தான் 6 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் 5ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!