காதலனுடன் தனிமையில் இருந்தபோது அழுத 8 மாத குழந்தை கொலை; 3 ஆண்டுகளுக்குப் பின் தாய் சிக்கியது எப்படி?
22 Oct, 2026
சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக தேடப்பட்டு வந்த பிரபல மும்பை தாதா சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு காலத்தில் மும்பையில் நிழல் உலக தாதாவாக இருந்த தாவூதின் கும்பலில் சோட்டா ராஜன் 2-வது நபராக இடம் பெற்றிருந்தார். சில வருடங்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தாவூதுக்கு எதிராக தனி அணியாக செயல்பட ஆரம்பித்தார் சோட்டா ராஜன். இதனால் இருவருக்குமிடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சோட்டா ராஜனின் கதையை முடிக்க தாவூத் திட்டமிட்டார். 2000-ஆம் ஆண்டு பாங்காக் மார்க்கெட்டில் தாவூத் ஆட்களால் ராஜன் சுற்றி வளைத்து அவர் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் சோட்டாவின் உடலில் பல இடங்களில் குண்டு பாய்ந்தது. எனினும் தீவிர சிகிச்சைக்கு பின் ராஜன் உயிர் பிழைத்தார். அதன்பின் ராஜன் எங்கிருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், சோட்டா ராஜன் இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து இந்தோனிசியாவின் பாலி தீவில் உள்ள உல்லாச விடுதி ஒன்றுக்கு வந்தபோது சோட்டா ராஜனை கைது செய்ததாக பாலி போலீசார் தெரிவித்துள்ளனர். கான்பெராவில் இருந்து ஆஸ்திரேலிய போலீசார் அளித்த தகவலின் அடிப்படையில் பாலி விமான நிலையத்தில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளபட்டதாகவும் அவர்கள் கூறினர். மேலும், இன்டர்போல் அமைப்பின் உதவியுடன் விரைவில் இந்திய அரசிடம் சோட்டா ராஜனை ஒப்படைக்கவுள்ளதாகவும் பாலி போலீசார் தெரிவித்தனர்.
டெல்லி: சோட்டா ராஜன் கைது செய்யப்பட்டது தொடர்பாக இந்தோனேஷியா மற்றும் இன்டர்போல் அமைப்புக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நன்றி தெரிவித்தார்.இந்தியாவால் 2 தசாப்தங்களாக தேடப்பட்டுவரும், நிழலுலக தாதா, சோட்டா ராஜன், இந்தோனேஷியாவின் பாலி தீவில், இன்டர்போல் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.ஆஸ்திரேலியா கொடுத்த தகவலின்பேரில், இந்தோனேஷியா அரசின் ஒத்துழைப்பால், இன்டர்போல் போலீசார் அவரை கைது செய்தனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!