இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
மரண வாகனத்தில் உள்ள பொத்தானை ஒருமுறை அழுத்தினால், காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு 30 விநாடிகளுக்குள் 21 சதவிகிதத்திலிருந்து 0.05 சதவிகிதமாகக் குறையும் போது, உள்ளே இருப்பவர் சிறு மாற்றத்தை உணர்வார். எனினும் சுய நினைவு இழப்பதற்கு முன்புவரை அவர் மகிழ்ச்சியாகவே இருப்பார் என்கிறார், இதன் கண்டுபிடிப்பாளரான பிலிப் நிட்ஸ்கே.
வாகனத்தில் உள்ள ஆக்ஸிஜனை நைட்ரஜனுடன் மாற்றி உடனே மரணத்தை விளைவிக்கிறது. இதற்கு கட்டணமாக 20 அமெரிக்க டொலரை செலவிட வேண்டும்.
“எந்த பீதியோ, மூச்சுத்திணறலோ இல்லாமல் மரணம் நேரிடுகிறது. வாகனத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு, நபரின் இதயத் துடிப்பு மற்றும் ரத்தத்தின் ஆக்ஸிஜன் செறிவு ஆகியவற்றை வாகனம் கண்காணிக்கிறது. 30 விநாடிகளுக்குள் செயல்முறை நிறைவடைய, மரணிப்பதற்கு 5 நிமிடங்கள் முன்பாக அந்த நபர் சுய நினைவு இழந்துவிடுவார்” என்றார் பிலிப் நிட்ஸ்கே.
அதே நேரம், மரணிப்பதற்கான வாகனத்தில் ஒருவர் அமர்ந்த பிறகு எல்லா செயல்முறைகளும் தொடங்கி, திடீரென மனமாற்றம் நேரிட்டால் என்ன செய்வது? இந்தக் கேள்விக்கு பதிலளித்த நிட்ஸ்கே, “ஒருமுறை நீங்கள் அந்த பொத்தானை அழுத்தினால், திரும்பிச் செல்ல வழி இல்லை” என்றார்.
இந்த வருடத்திற்குள் முழு பயன்பாட்டுக்கு வரும் இந்த வாகனத்தை பயன்படுத்தி இறப்போரின் விவரங்கள் மற்றவர்களுக்கு பகிரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வயது வரம்பு 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; இருப்பினும் 18 வயதுக்கு மேற்பட்ட ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்தால், இந்த வாகனத்தைப் பயன்படுத்தி மரணத்தை எதிர்கொள்ளலாம்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!