news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் வைத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்

22 Nov, 2023
கலகெதர நீதிவான் நீதிமன்ற சுற்றுவட்டாரத்தில் 12 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 58 வயதுடைய நபர் ஆவார். குறித்த சிறுமி தனது தாயுடன் இருக்கையில் அமர்ந்திருக்கும்போதே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். குற்றம் சுமத்தப்பட்டவர் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கலகெதர நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!