news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நீதிமன்ற வளாகத்துக்குள் பொலிஸ் உத்தியோகத்தர் தற்கொலை!

27 Feb, 2024
நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைச் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (27) மாத்தறை கொடவில பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. கொடவில பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 52 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். விடுமுறையிலிருந்து கடமைக்குத் திரும்பிய அவர், கொடவில நீதிமன்ற வளாகத்தில் வைத்தே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!