ஓமன் கடலில் துள்ளிக்குதித்த அரிய வகை இளஞ்சிவப்பு டால்பின்கள் -வீடியோ
24 Oct, 2026
இந்த வாரம் புடவைகள் வாரம்
சில நேரங்களில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு இறுக்கமான சூழ்நிலை ஏற்படும்.
ஆனால் அந்த நேரத்திலும் அங்கே சமயோசிதனமாக செயல்பட்டு கோபிநாத் பல பிரச்சனைகளுக்கு கருத்து கூறியிருக்கிறார்.
ஒரு சில வாரங்கள் இந்த நிகழ்ச்சியை ஆழ்ந்த கருத்துள்ளதாக இருந்தாலும் சிலர் நேரங்களில் இந்த நிகழ்ச்சி என்டர்டைன்மென்ட் கொடுக்கும் விதமாக இருக்கும் அந்த மாதிரி தான் தற்போது வர இருக்கும் வாரத்தில் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் வெவ்வேறு வகை சேலைகள் என்கிற தலைப்பில் ஷோ தொடங்குகிறது.
இத்தனை புடவையா
அதில் சேலை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதை ஆசையாக வாங்கும் பெண்கள் என இரண்டு வகையாக போட்டியாளர்கள் பிரிந்து இருக்கின்றனர்.
அந்த வகையில் ஒரு பெண்ணிடம் கோபிநாத் சமூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கேள்வி, உங்ககிட்ட எவ்வளவு புடவை இருக்கிறது என்று கோபிநாத் கேட்க, அதற்கு அந்தப் பெண் நான் எண்ண மாட்டேன் சார்.
எண்ணுனா கண்ணு பட்டுரும். அதனால எண்ண மாட்டேன் என்று சொல்ல, ஓ என்று வியப்போடு கேட்ட, கோபிநாத் பிறகு சுமார் ரப்பா சொல்லுங்களேன் என்று சொல்ல அந்த பெண் அதற்கு சுமார் ஏழு பீரோ வச்சிருக்கேன் என்று சொன்னதும் அரங்கத்தில் இருந்து அனைவரும் வாயை பிளந்து விட்டனர்.
இப்படி சொல்லிட்டாங்களே
அடுத்து ஒரு பெண் ஃபர்ஸ்ட் நான் சேலை கட்டும் போது... சப்போஸ் நீங்க சேலை கட்டுனா எப்படி இருக்கும் என்று கேட்க? ஏம்மா என்னையே வந்ததிலிருந்து வம்புக்கு இழுக்கிறீங்க என்று கேட்க?
ஒரு மாதிரி பீலிங் இருந்து சார் என்று அந்தப் பெண் கூறி, பிறகு ரொம்ப கேவலமா இருந்து சார் என்று சொல்ல, அதைக் கேட்டு கடுப்பான கோபிநாத் சிரித்தபடியே ஏம்மா அதையும் சொல்லிட்டு, இதையும் சொல்ற என்று கேட்கிறார்.
தற்போது இந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது. இந்த ப்ரோமோவிற்கு அதிகமான ரசிகர்கள் கோபிநாத்தின் மைண்ட் வாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும் என்று தங்களுடைய மனதில் வந்தது எல்லாம் கமாண்டாக அடித்து விடுகிறார்கள்.
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Neeya Naana 02-04-2023 Vijay Tv Show
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!