நீராடச் சென்ற இரு பெண்கள் சடலமாக மீட்பு
இறம்பொடை ஆற்றில் நீராடச் சென்ற இரு பெண்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை (13) 04.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கொத்மலை பொலிசார் தெரிவிக்கின்றனர்.
26 வயதான ஆசிரியர் ஒருவரும் 33 வயதான தாதி ஒருவருமே சம்பவத்தில் பலியாகியுள்ளனர்.
புத்தளம் - அலாவத்த பகுதியில் இருந்து நுவரெலியாவிற்கு சுற்றுலா வந்த ஒரு குழுவினர், திரும்பும் வழியில் இறம்பொடை ஆற்றில் நீராடச் சென்றுள்ளனர்.
இவர்களில் அனேகமானவர்கள் நீராடி விட்டு வௌியே வந்த பின்னும் குறித்த இரு பெண்களும் நீண்ட நேரம் நீரில் இருந்துள்ளனர்.
இதன்போது திடீரென ஆற்றின் நீர் மட்டம் அதிகரிக்க இருவருக்கும் நீரிற்குள் இருந்து வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மற்றையவர்கள் எவ்வளவோ முயற்சித்தும், இவர்களை காப்பாற்ற முடியவில்லை.
இந்தநிலையில் இருவரது சடலமும் இன்று காலை (14) கண்டுபிடிக்கப்பட்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!