நுளம்புக்கு புகை போட்ட முதியவர் தீப்பற்றி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த நுளம்புக்கு புகைப்போட்ட முதியவர் ஒருவர் நேற்று முன்தினம் (26) உயிரிழந்துள்ளார்.
சின்னத்துரை செல்வநாயகம் (வயது 75) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 19 ஆம் திகதி குறித்த முதியவர் மண்ணெண்ணெய் ஊற்றி நுளம்புக்கு புகைப்போட்டுள்ளார். இந்நிலையில் அவரது உடையில் தீப்பற்றியது. இந்நிலையில் அவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் நேற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!