உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
தீவிரமாக நடைபெற்று வந்த காசியின் வழக்கு
இது தொடர்பான வழக்குகள் அனைத்தும் நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்திலும், போக்சோ சிறப்பு நீதிமன்றத்திலும் (பாதிக்கப்பட்டதில் ஒருவர் சிறார் என்பதால்) நடந்து வருகிறது.
இதில், 21- வயது பெண் ஒருவருடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டு, அதை வீடியோவாகவும் பதிவு செய்து, பாதிக்கப்பட்டவரை மிரட்டி மீண்டும் மீண்டும் துன்புறுத்தி வந்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., பதிவு செய்த வழக்கு ஒன்றும் நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து ஜூன் 14 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது?
மகிளா நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய், பாதிக்கப்பட்ட பெண்ணை பல முறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக காசிக்கு ஐ.பி.சி., 376(2), 354 சி மற்றும் 506(22) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆயுள் தண்டணையும், ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் லிவிங்ஸ்டன் பி.பி.சி தமிழிடம் பேசினார்.
"இந்த வழக்கில் இருந்த சாட்சியங்கள் அறிவியல் பூர்வமான சாட்சியங்களும் (Scientifical evidences), வாய்மொழி சாட்சியங்களும் (Oral evidences) தான். வாய் மொழி சாட்சியம், பாதிக்கப்பட்ட பெண் கூறியவை, அறிவியல் பூர்வமான சாட்சியங்கள் குற்றம்சாட்டப்பட்ட காசி பதிவு செய்து வைத்திருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள். இவற்றை சைபர் நிபுணர்கள் (Cyber Expert) மூலம் நிரூபித்து வழக்கை நடத்தினோம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “எதிர் தரப்பில் உரிய நேரத்தில் பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையிடம் புகார் அளிக்க வில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு வாதங்களை முன்வைத்தனர்.
அதே போல் வழக்கு விசாரணையை தாமதப்படுத்தும் நோக்குடன் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் எதிர் தரப்பினர் தொடர்ந்து பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆனால் அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட காசிக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை சிறையில் இருக்கும் வகையில் ஆயுள் தண்டணையும், ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஆதாரங்களை மறைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட காசியின் தந்தை தங்கபாண்டியனை நீதிபதி விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார்” என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.
விசாரணையில் ஏற்பட்ட சவால்கள்
இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக சி.பி.சி.ஐ.டி.,யில் 2022 ஆம் ஆண்டு வரை பணியாற்றி தற்போது பணி மாறுதலாகி கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ஆய்வாளர் சாந்தி பி.பி.சி தமிழிடம் பேசினார்.
அவர் கூறும்போது, “இந்த வழக்கு விசாரணை மிகவும் சவாலாக இருந்தது. நாங்களும் கடுமையாக தொடர்ந்து பணியாற்றினோம்.
குற்றவாளி பிணையில் விடுதலை ஆக முடியாத நிலையில், நாங்கள் உரிய காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தோம்.
இதனால் பிணையில் வெளிவர முடியாமல், கைது செய்யப்பட்டதிலிருந்து மூன்று ஆண்டுகளாக குற்றவாளி தொடர்ந்து சிறையிலேயே இருந்தார்."
"பாதிக்கப்பட்டவர்களை கருத்தில் கொண்டு ஆய்வக அதிகாரிகளிடம் பேசி, முடிவுகளை கூட நாங்கள் விரைவாக பெற்று தந்தோம். இதனால் விசாரணை விரைவாக நடைபெற்று, காசி விசாரணை கைதியாக சிறையில் இருந்த காலத்திலேயே அவருக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது."
"இவ்வழக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் பெரும்பாலானவர்கள் மிகவும் எளிமையான பின்புலம் உள்ளவர்கள்.
பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த தீர்ப்பை வரவேற்று அவர்களது மகிழ்ச்சியை என்னோடு பகிர்ந்து கொண்டனர்” என்று ஆய்வாளர் சாந்தி விவரிக்கிறார்.
காசியிடம் கைப்பற்றப்பட்ட கைபேசி மற்றும் மடிக்கணிணியில் 1900 த்திற்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண புகைப்படங்களும், 300 க்கும் மேற்பட்ட பெண்களின் நிர்வாண விடியோக்களும் இருந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசி மீது தொடுக்கப்பட்டுள்ள 7 வழக்குகளில் ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. மீதமுள்ள வழக்குகளில் இரண்டு வழக்குகளில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!