news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நெஞ்சை பதற வைத்த பச்சிளம் குழந்தைகளின் மரணம்

15 Apr, 2024
ஹெட்டிபொல, திக்கலகெதர பிரதேசத்தில் கொங்கிறீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கி சிலை விழுந்ததில் 8 வயதுச் சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த சிறுவன் குளியாபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். வீட்டின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த கொங்கிறீட்டால் செய்யப்பட்ட ஒட்டகச்சிவிங்கியின் சிலையே குழந்தையின் உடலில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, பொலன்னறுவை - அரலகங்வில ருஹுனுகம கிராமத்தில் உள்ள வீடொன்றில் பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி ஒன்று தலையில் விழுந்ததில் மூன்றரை வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹிருனி ரஷ்மிகா தேவ்மினி என்ற சிறுமியே இதில் உயிரிழந்துள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!