news@ilakkiyainfo.com

பிரிவுகள்

நெடுந்தீவிலிருந்து சிகிச்சைக்காக 03 நோயாளர்கள் உலங்கு வானூர்தி மூலம் அனுப்பி வைப்பு!- (வீடியோ)

28 Nov, 2024
நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள்  மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இன்று (28) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 3 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு தரைவழியாக கொண்டுசென்று யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!