உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் 5வது யூனிட்டில் உள்ள கொதிகலனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில், என்எல்சி ஒப்பந்த ஊழியர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் நெய்வேலி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தீ விபத்து ஏற்பட்ட அனல்மின் நிலைய பகுதிகளில் தொடர்ந்து மீட்புப் பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகள் முழுமை அடைந்த பிறகே எத்தனை தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும் எனக் கூறப்படுகிறது. இந்த தீ விபத்தைத் தொடர்ந்து இரண்டாவது அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
நெய்வேலி அனல் மின் நிலைய விபத்து என்ன சொல்கிறது என்.எல்.சி நிர்வாகம்?
நெய்வேலி அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து என்.எல்.சி நிர்வாகத்தின் தலைமை பொது மேலாளர் எஸ்.குருசுவாமிநாதன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, "என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையம் யூனிட் ஐந்தில் பராமரிப்பு காரணமாக மூடப்பட்டுப் பராமரிப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்ட போது, கொதிகலனில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக ஒரு நிர்வாகி, இரண்டு மேற்பார்வையாளர்கள், மூன்று ஊழியர்கள் மற்றும் 17 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உட்பட 23 நபர்கள் காயமடைந்தனர். இதில், ஒப்பந்த தொழிலாளர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேற்கொண்டு காயமடைந்த 16 நபர்கள் நெய்வேலி மருத்துவமனையில் முதன்மை சிகிச்சைக்குப் பிறகு உடனடியாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு, சிறப்புச் சிகிச்சை பெற்று வருகின்றனர்," "இந்த தீ விபத்து குறித்து என்.டி.சி.சி.யின் ஓய்வு பெற்ற தொழில்நுட்ப இயக்குநர் மொகாபத்ரா தலைமையில் உயர் மட்ட விசாரணை நடத்தப்படும். மேலும், உள்கட்ட அமைப்புக்கள் குறித்து விசாரணை செய்ய என்.எல்.சி இயக்குநர்(பவர்) தலைமையிலான மூத்த நிர்வாகிகளுடன் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இரண்டாவது அனல்மின் நிலைய முதன்மை மேலாளர் விசாரணை முடியும் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தற்போது இரண்டாவது அனல்மின் நிலையத்தின் உள்ள Stage-II நிலையம் முழுவதையும் பாதுகாப்பு கருதி மூட உத்தரவிடப்பட்டுள்ளது," எனத் தெரிவித்துள்ளார் எஸ்.குருசுவாமிநாதன்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!