இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
2முதல் 4 வயதுக்குள் உள்ள சிறுமிகள் குமாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.குமாரியாக தேர்வு செய்யப்படுவதற்கு பல கட்ட சோதனைகள் நடைபெறும். குறிப்பாக அவரது மனதும், உடலும் வலிமையானதாக இருப்பதைச் சோதனை செய்வர்.
இறுதியாக சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.
குமாரிகள் அரண்மனைக் கோவிலுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்கப்படும். குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.
குமாரியின் கால்கள் தரையில் படுவது பாவச் செயலாகக் கருதப்படுகிறது. எனவே பல்லக்கில் வைத்துச் சுமந்து செல்லப்படுவார்.
ஓய்வுபெறும் குமாரிகளுக்கு அரசு மாத ஓய்வூதியம் வழங்கும். குராமரியாக இருந்து ஓய்வுபெற்ற பெண்களை திருமணம் செய்பவர் விரைவில் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால் பல முன்னாள் குமாரிகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்வர். ",
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!