சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
2022 ஆம் ஆண்டு மே மாதம் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அரச எதிர்ப்பு போராட்டக்காரர்களால் ‘நோ-டீல் கம’ போராட்டக்களம் அமைக்கப்பட்டது.
மே 09 ஏற்பட்ட வன்முறையின் பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றதையடுத்து அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் அலரி மாளிகைக்கு முன்னால் ‘நோ-டீல் கம’ போராட்டக்களத்தை அமைத்தனர்.
இதையடுத்து இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில், குறித்த பகுதியில் இருந்த போராட்டக்களத்தை அங்கிருந்து அகற்ற போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!