இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
உணவு உரிமைக்கான ஐ.நா.வின் சிறப்பு ஆய்வாளர் மைக்கேல் ஃபக்ரி நவ.25 அன்று ஐ.நா அவையில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையில் முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள உணவுப் பற்றாக்குறை மற்றும் மோசமான சுகாதார நிலைமைகள் இஸ்ரேலிய இராணுவத்தால், பாலஸ்தீனர்களின் உயிருக்கு எவ்வாறு கடுமையான அச்சுறுத்தல்கள் ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான இஸ்ரேலின் நடவடிக்கைகளால் துப்பாக்கி குண்டுகளால் உயிரிழந்தவர்களைவிட, பசியால் அதிக பேர் பலியாகி உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. காஸாவில் விவசாயம், துறைமுகங்கள், மீன்பிடிப்பு கப்பல்கள் அழிக்கப்பட்டதால், பாலஸ்தீனத்துக்கான உணவு விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனம் மற்றும் காஸாவில் உள்ள மக்களை கொன்று பழிவாங்குவதற்கு பசியை ஒரு அரசியல் மற்றும் ராணுவ ஆயுதமாக கையில் எடுத்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போரில் இதுவரை 44,282 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும், போரில் சிக்கி 1,40,880 பேர் காயமடைந்துள்ளனர். இன்னும் சிலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.View this post on Instagram
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!