தி ஹண்ட் (The Hunt) தொடர் சொல்வதுபோல ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா?
24 Aug, 2026
ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழ் மன்னர்கள் எடுத்த சபதம்
1796 ஆம் ஆண்டு இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சி தொடங்கியது.
டச்சு காலத்தில், டச்சு ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிராகப் போரிட்டதற்காக பண்டார வன்னியனை பதவியில் இருந்து அகற்றினர். பின்னர் ஆங்கிலேயர்கள் அவருக்கு தனது இராஜ்ஜியத்தை திரும்பக் கொடுத்தனர்.
இருப்பினும், ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு விரட்டும் போராட்டத்தைத் தொடங்க மன்னர் சபதம் செய்ததாக வரலாற்றுப் பதிவுகள் காட்டுகின்றன.
ஆங்கிலேயருக்கு எதிராகப் பெரும் படையைத் திரட்டத் தொடங்கிய பண்டார வன்னியன், வன்னிப் பகுதியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
குறிப்பாக 1803 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 25 ஆம் திகதி இராணுவத்துடன் வந்து ஆங்கிலேயருக்கு எதிராகப் போரிட்டு முல்லைத்தீவு கோட்டையைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றார்.
மிகக் குறுகிய காலத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து இழந்த பிரதேசத்தை மீண்டும் பெற்றார்.
பண்டார வன்னியர்களின் மரணம்
இந்தப் பின்னணியில் பண்டார வன்னியன் 1803இல் கட்சிலைமடு என்ற இடத்தில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
ஓக்டோபர் 25, 1803 இல், பிரிட்டிஷ் ஜெனரல் தலைமையிலான இராணுவம் பண்டார வன்னியர்களைத் தாக்கியது. இந்தத் தாக்குதலைக் கண்டு பண்டார வன்னியனும் அவனது படையினரும் ஆச்சரியமடைந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் போரில் பண்டார வன்னியர்கள் கடுமையாகப் போரிட்டாலும் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டனர். இந்தப் போரில் பண்டார வன்னியர்கள் வீரமரணம் அடைந்ததாகவும் வரலாறு குறிப்பிடுகிறது.
மாவீரனாகக் கொண்டாடப்படும் பண்டார வன்னியன்
ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போரிட்டு ஒரு தமிழ் மன்னன் இறந்தாலும், இந்நாட்டுத் தமிழ் மக்கள் அவரை ஒரு வீரனாகவே கருதுகின்றனர்.
பண்டார வன்னியனின் தோல்விக்கான நினைவுச் சின்னம் ஒட்டுசுட்டானில் இன்றும் காணப்படுகின்றது.
எனினும், பண்டார வன்னியனின் தோல்விக்காக நாம் வருத்தப்பட கூடாது என ஒட்டுசுட்டான் தமிழ் மகா வித்தியாலய அதிபர் சின்னப்பா நாகேந்திரராஜா தெரிவித்துள்ளார்.
பண்டார வன்னியர்கள் இலங்கைத் தமிழர்களின் பெருமை
"பண்டார வன்னியர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்று நாம் வேதனைப்படவும் வருத்தப்படவும் தேவையில்லை.
ஏனென்றால் பண்டார வன்னியர்களைத் தோற்கடித்த தளபதி கேப்டன் வொன்ட்ரிவெர்க் இந்த இடத்தில் தோற்கடிக்கப்பட்டார் என்று ஒரு வரலாற்றுப் பதிவாக ஒரு நினைவுச்சின்னம் உருவாக்கப்பட்டுள்ளது.
"அந்த வரலாற்று நிகழ்வு 1803ல் நடந்தது என்பதற்கு இதோ ஒரு சான்று. எனவே இதில் வெளியாகும் பண்டார வன்னியனின் வழித்தோன்றல்களான நமது வீரத் தமிழ் வரலாறு என்று பெருமையுடன் கூறலாம்.
இதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்று சின்னப்பா நாகேந்திரராஜா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும், பண்டார வன்னியர்கள் ஆங்கிலேயர்களிடம் இருந்து ஆட்சியைப் பிடித்த ஆகஸ்ட் 25ஆம் திகதி, வெற்றி நாளாகக் கொண்டாடப்படும் என்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!