news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பதுளை மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; ஊழியர்கள் உடனடியாக வெளியேற்றம்

14 Jan, 2026

பதுளை மாவட்ட செயலகத்தில் மூன்று வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வந்த அநாமதேய தொலைபேசி அழைப்பை அடுத்து, பொலிஸார் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததன்படி, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு முன்னர் குண்டுகள் வெடிக்கும் என அடையாளம் தெரியாத நபர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட செயலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிலாளர் அலுவலகத்தில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு அழைக்கப்பட்டு, தீவிர சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!