தேர்தலுக்கு முதல் நாள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா! - தீவிர மோதலுக்கு அறிகுறியா?
03 Nov, 2026
நதீமுக்கு விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவை அவரை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்றது பெருமிதமாக இருக்கிறது.
பாகிஸ்தானில் ஈட்டி எறிதல் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அவர் எங்கள் வீட்டுக்கு வரும் போது எதைப்பற்றியும் குறையாக கூறமாட்டார். அவரது இரண்டு குழந்தைகளும் உள்ளூரில் உள்ள ஒரு பள்ளியில் படித்துவருகின்றனர்” என்றார்.
பரிசுகள்
உலக தடகள கூட்டமைப்பு அர்ஷத் நதீமுக்கு 50,000 அமெரிக்க டாலர்கள் (கிட்டத்தட்ட ரூ. 42 லட்சம்) வழங்கியுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர் அலி ஷேகானி சுஸுகி ஆல்டோ கார் ஒன்றை பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில கவர்னர் சர்தார் சலீம் ஹைதர் கான், அர்ஷத் நதீமுக்கு பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் 20 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
சிந்து மகாண ஆளுநர் கம்ரான் டெசோரி பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் 10 லட்சம் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் அஹ்மத் ஷஜாத் தன்னுடைய அஹ்மத் ஷஜாத் அறக்கட்டளை, ரிப்போர்டேஜ் பிராப்பர்டீஸ் குழுமத்தின் சார்பாக ரூ. 10 லட்சம் அறிவித்துள்ளார் . .
சிந்து மாகாணத்தின் செய்தித் தொடர்பாளரும், சுக்கூர் மேயருமான பாரிஸ்டர் அர்சலன் இஸ்லாம் ஷேக், தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு தங்க கிரீடம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
அவரின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், சுக்கூரில் கட்டப்பட்டு வரும் புதிய விளையாட்டு மைதானத்திற்கு \"அர்ஷத் நதீம் மைதானம்\" என்று பெயரிடப்படும் என்றும் கூறினார்.
ஜாஃப்ரியா பேரிடர் மேலாண்மை நல அமைப்பின் நிறுவனர் ஜாபர் அப்பாஸ் தங்கப் பதக்கம் வென்ற அர்ஷத் நதீமுக்கு புதிய சுஸுகி ஆல்டோ காரை பரிசாக அறிவித்துள்ளார்.
நதீமுக்கு ஒரு கார், வாழ்நாள் முழுவதும் இலவச எரிபொருள் வழங்கப்படும் என ‘கோ’ பெட்ரோல் பம்ப் சி.ஓ.ஓ ஜீஷன் தயாப் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் ரூ. 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி, நதீமின் சிறந்த சாதனையைப் பாராட்டி பாகிஸ்தானின் இரண்டாவது உயரிய விருதான ஹிலால்-இ-இம்தியாஸைப் பெறுவார் என்றும் அறிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!