news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பருத்தித்துறையில் துப்பாக்கி சூடு ; ஒருவர் காயம் ; மற்றுமொருவர் தப்பியோட்டம்

02 Mar, 2025
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் ரக வாகனம் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (02) பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் , மற்றுமொருவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளார். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனம் ஒன்றினை பொலிஸார் மறித்த போது , பொலிஸாரின் கட்டளையை மீறி வாகனத்தை சாரதி தொடர்ந்து செலுத்தி செல்ல முற்பட்ட வேளை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். அதில் ஒருவர் காயமடைந்த நிலையில் , மற்றையவர் டிப்பர் வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பியோடியுள்ளார். காயமடைந்தவரை பொலிஸார் கைது செய்து , பொலிஸ் பாதுகாப்புடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அதேவேளை தப்பியோடிய நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!