பறவைக் காய்ச்சல் – 3 இலட்சம் கோழிகளை அழித்த ஜப்பான்
ஜப்பானின் ஆய்ச்சி மாகாணத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் கோழிகள் இறந்தன. இதை தொடர்ந்து இறந்துபோன கோழிகளை பரிசோதித்ததில் அவற்றில் பெரும்பாலானவை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தது தெரியவந்தது.
இது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆய்ச்சி மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
பறவைக் காய்ச்சல் மேலும் பரவுவதை தடுக்கும் விதமாக மாகாணம் முழுவதிலும் சுமார் 3 இலட்சத்து 10 ஆயிரம் கோழிகளை அழிக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.
இதே போல் கோஹிமா மாகாணத்திலும் பறவைக் காய்ச்சல் காரணமாக 34 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜப்பானில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து பறவைக் காய்ச்சல் பரவி வருவதும் இதுவரை 33 இலட்சம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!