சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவன் சடலமாக மீட்பு!!
28 Oct, 2026
கொழும்பு - காலி முகத்திடலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் 7 ஆவது நாளாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள பகுதியில் “கோட்டா கோ கம” என்ற பெயர்ப்பலகைப் போன்ற பதாதை காட்சிப்படுத்தப்பட்டு, அங்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டு போராட்டம் தொடர்கின்றது.
நேற்று போராட்ட களத்தில் புதுவருட நிகழ்வுகளும் இடம்பெறன. ரபான் அடித்து மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு வெவ்வேறு விதங்களிலும் அரசாங்கத்திற்கு எதிராக தங்களது எதிர்ப்பை மக்கள் வெளிப்படுத்தினர்.
பல்லாயிரக்கணக்கான இளைஞர் , யுவதிகள் உள்ளிட்ட சகல தரப்பினரையும் இணைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் உணர்வு பூர்வமாகவும் , வலிமையானதாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் இன்றைய நாள் வரை எவ்வித வன்முறைகளும் இல்லாது மிகவும் அமைதியான முறையில் இந்த அரச எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் அரசாங்கம் பேசுவதற்கு தயாராக இருக்கின்றது என்று கோரிக்கை விடுத்த போதிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அந்த கோரிக்கைக்கு செவிமடுக்காது, ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும்., ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் பாராளுமன்றத்தில் ஆசனம் வழங்கக் கூடாது போன்ற சில கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டத்தை தொடர்கின்றனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கமும் பதவி விலகவேண்டுமென வலியுறுத்தி தமிழ், சிங்களப்புத்தாண்டுக்கொண்டாட்டமான நேற்றையதினம் (14) நாடளாவிய ரீதியில் பல ஆர்ப்பாட்டங்களும், அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலான நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!