Belonging: A Journey of Love’ - இத்தாலிப் பெண் இந்தியாவின் மகளான கதை!
22 Nov, 2026
இரான் தொடர்பை உடைக்க முயற்சி பஷர் அல் அசத் ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை, அவரது ஆட்சியின் பலவீனம் அச்சம் மற்றும் வதை முகாம்களுக்கு பின்னால் மறைந்திருந்தது. பஷர் அல் அசத் ஒரு பலவீனமானவர், அவர் ரஷ்யா மற்றும் இரானைச் சார்ந்து இருக்கிறார் என்று உலக அளவில் ஒருமித்த கருத்து இருந்தது. மேலும் அவர் தனது குடும்பத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதற்காக, பல பிரிவுகளாக உடைத்த ஒரு நாட்டிற்குத் தலைமை தாங்குகிறார் என்றும் கருத்தப்பட்டது. ஆனால் அவர் மத்திய கிழக்கை பொறுத்தவரை ஒரு வலிமையான பயனுள்ள தலைவராக கருதப்பட்டார். இட்லிப்பில் இருந்து கிளர்ச்சியாளர்கள் கிளம்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் சிரியாவை இரானிடம் இருந்து பிரிக்க முயற்சிப்பதாக பரவலாக தகவல் வெளியானது. லெபனானில் உள்ள ஹெஸ்பொலா படைகளுக்கு ஆயுதங்கள் வழங்க இரான் பயன்படுத்தும் விநியோகச் சங்கிலியில் சிரியா இருக்கிறது எனக்கூறி, சிரியாவில் உள்ள இலக்குகள் மீது கடும் வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி வருகிறது. லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் ஹெஸ்பொலாவுக்கு பலத்த அடியாக இருந்தது. ஹெஸ்பொலா மீண்டும் வளர்வதை தடுப்பதே இந்த தாக்குதலின் நோக்கமாக இருந்தது. அதே நேரத்தில், இரானுடனான தனது கூட்டணியை அசத் முறித்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில் சில விஷயங்களை ஐக்கிய அரபு அமீரகமும் அமெரிக்காவும் செய்தன. பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஜோ பைடன் ஆகிய இருவரும் அசத் ஆட்சியின் வீழ்ச்சிக்கு உரிமைக் கோரியுள்ளனர். அமெரிக்க ஆயுதம் மற்றும் அந்நாட்டின் தொடர்ச்சியான ஆதரவுடன் ஹெஸ்பொலா மற்றும் இரானுக்கு இஸ்ரேல் சேதம் ஏற்படுத்தியது. பைடன் யுக்ரேனுக்கு தொடர்ச்சியாக ஆயுத உதவிகளை வழங்கினார். இந்த இரண்டு காரணங்களால் அசத்தின் நெருங்கிய நட்பு நாடுகளான ரஷ்யாவும், இரானும் அவரை காப்பாற்றுவதற்கு சாத்தியமற்று போனது. அசத் வீழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்பு வரை, இரானை கட்டுப்படுத்தவும் சேதப்படுத்தவும் தங்கள் உத்தியின் ஒரு பகுதியாக அவரை அமெரிக்காவும், இஸ்ரேலும் பார்த்தனர். ஆனால், நள்ளிரவில் திடீரென அசத் விமானத்தில் ஏறி ரஷ்யாவுக்கு தப்பிச் செல்வார் என்று அவர்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.தனது தந்தை இறந்ததில் இருந்து, சிரியாவில் சீர்திருத்தங்களை கொண்டு வருவேன் என பஷர் வாக்குறுதி அளித்து வந்தார்.
இரானுக்கு அடி சிரியாவின் புதிய ஆட்சியாளர்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வது இரானுடனான ஒப்பந்தம் செய்துகொள்வதை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று முடிவு செய்தால், சிரியாவில் இரானின் ஆயுத விநியோக சங்கிலி முடிவிற்கு வந்துவிடும். அடுத்து என்ன நடக்கும் என அனைத்து தரப்பினரும் தீவிரமாக யோசித்து வருகின்றனர். தற்போது சிரியா மக்கள், அதன் அண்டை நாடுகள் மற்றும் உலக நாடுகள் மற்றோரு புவிசார் அரசியல் பூகம்பத்தை எதிர்கொள்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை தொடர்ந்து ஏற்பட்ட தொடர் நிகழ்வுகளை விட இது பெரியதாக இருக்கும். இது கடைசியானதாக இருக்காது. இரான் தனது 'எதிர்ப்பு அச்சு'-வின் இறுதி வீழ்ச்சியை காண்கிறது. ஹெஸ்பொலா மோசமாக சேதமடைந்துள்ளது. அசத்தின் ஆட்சி வீழ்ச்சி அடைந்துவிட்டது. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு, இரானின் ஆட்சியாளர்கள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்த அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியுள்ளனர். ஐ.எஸ் குழுவின் ஜிஹாதி தீவிரவாதிகளை விட அசத் மேலானவர் என்று நான் முன் வரிசையில் சந்தித்த பல வீரர்கள் என்னிடம் கூறினார்கள். 2024 ஆம் ஆண்டில், சிரியா ராணுவம் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கிளர்ச்சிப் படையை எதிர்கொண்டது. கிளர்ச்சியாளர்கள் தங்களை தேசியவாதிகள், இஸ்லாமியர்கள் என்றும் தாங்கள் ஜிஹாதிகள் அல்ல என்றும் அடையாளப்படுத்திக்கொண்டனர். பல சிரியா ராணுவ வீரர்கள் அவர்களுடன் சண்டையிட மறுத்து, தங்கள் சீருடைகளை களைந்துவிட்டு வீட்டிற்குச் சென்றனர்.சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அந்நாட்டு சிறைகளில் இருந்து பலர் விடுவிக்கப்பட்டனர்
இராக், லிபியா போன்ற நிலை வருமா? பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் சூழலில், அதனால் ஏற்பட்ட வடுக்களை குணப்படுத்த சிரியாவில் 'தேசிய நல்லிணக்கம் கொண்ட சூழலை உருவாக்குவதே அந்நாட்டிற்கு உகந்தது. கொள்ளை மற்றும் பழிவாங்கும் மனநிலையால் சிரியாவில் புதிதாக மீண்டும் போர் சூழல் ஏற்படும். ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக் குழுவின் தலைவரான அபு முகமது அல் ஜொலானி சிரியாவின் அனைத்துப் பிரிவினருக்கும் ஒருவரையொருவர் மதிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஜொலானியின் குழுவினர் இணைந்து அசத்தின் ஆட்சியை கவிழ்த்துவிட்டனர். மேலும் தற்போது அவர் சிரியாவின் தலைவராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இருப்பினும், சிரியாவில் உள்ள பல ஆயுதக் குழுக்கள் ஜொலானியுடன் உடன்படவில்லை. அவரிடம் இருந்து தங்கள் பகுதிகளை கைப்பற்ற விரும்புகின்றன. தெற்கு சிரியாவில், பழங்குடி போராளிகள் அசத்தின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை. சிரியாவில் புதிய ஆட்சியாளர்கள் வந்தால்கூட தங்களுக்குப் பிடிக்காத விஷயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிரியாவின் கிழக்குப் பாலைவனத்தில்,எஞ்சியிருக்கும் ஐ.எஸ் குழுவை அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக பார்க்கிறது. தங்கள் நாட்டின் எல்லைகளில் ஐ.எஸ் குழு வருவதற்கான சாத்தியம் குறித்து கவலை கொண்ட இஸ்ரேல், சிரியா ராணுவத்தின் ராணுவ உள்கட்டமைப்புகளை குறி வைத்து தாக்கி வருகிறது. அதிக சட்டம் ஒழுங்கு இல்லாத ஒரு நாட்டில், சிரியா ராணுவத்தை கலைப்பதை விட சீர்திருத்தம் செய்வதே முக்கியமானதாக இருக்கும். 2003-ஆம் ஆண்டு இராக் ராணுவத்தை கலைக்க அமெரிக்கா எடுத்த அலட்சியமான முடிவு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தியது. கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு லிபியாவில் உள்நாட்டுப் போர் வெடித்தது, சதாம் ஹுசைனின் வீழ்ச்சிக்குப் பிறகு இராக்கில் குழப்பம் ஏற்பட்டது. எந்த மாற்று ஏற்பாடுகளும் செய்யாமல் அந்த இரு சர்வாதிகாரிகளும் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடம் கொள்ளை, பழிவாங்கல், அதிகார அபகரிப்பு மற்றும் உள்நாட்டுப் போர் போன்ற அலைகளால் நிரப்பப்பட்டன. லிபியா அல்லது இராக் ஆகிய நாடுகளைப் போல் நிலை மாறினால், அது சிரியா மக்களுக்கு மிகவும் மோசமானதாக இருக்கும். சிரியா மக்கள் தலைமுறைகளாக தங்கள் சொந்த விதிகளின்படி செயல்படவில்லை. இந்த உரிமையை அவர்களிடமிருந்து அசத் குடும்பம் பறித்து விட்டது. போர் நாட்டை மிகவும் பலவீனப்படுத்தியதால் பெரிய வெளிநாட்டு சக்திகள் சிரியா மீது தங்கள் சொந்த அதிகாரத்தை அதிகரிக்க வழிவகுத்தது. சிரியா மக்களுக்கு இன்னும் தங்கள் வாழ்க்கையை வாழ சுதந்திரம் இல்லை. அது அவர்களுக்கு இருந்தால் அவர்கள் புதிய மற்றும் சிறந்த நாட்டை உருவாக்கும் வாய்ப்பு இருக்கலாம். பிபிசிசிரியா படைகள் டாங்கிகள் உட்பட ராணுவ ஆயுதங்களை கைவிட்டன
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!