உதயநிதி முதல் அன்பில் மகேஷ் வரை.. திமுக மீது மட்டுமே குறி? அந்த 3 ஃபைல்களை திறந்தாரா CM விஜய்?
28 Oct, 2026
அதே நேரத்தில், பாகிஸ்தான் சீனாவிலிருந்து ஐந்தாம் தலைமுறை போர் விமானமான J-35 ஐ பெற்று வருகிறது. மேலும், சீனா தனது ஆறாம் தலைமுறை போர் விமானங்களின் முன்மாதிரிகளான J-36 மற்றும் J-50 ஆகியவற்றை சோதனை செய்து வருகிறது.
ஏ,எம்.சி.ஏ (AMCA) திட்டத்திற்கான ஒப்புதல், பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு இந்த திட்டத்தை வடிவமைத்து மேம்படுத்த ஒப்புதல் அளித்த ஒரு வருடம் கழித்து வந்துள்ளது.
ஏ,எம்.சி.ஏ (AMCA) விமானம், 25 டன் எடை கொண்ட இரட்டை எஞ்சின் விமானமாகும். இது எதிரி ரேடார்களில் இருந்து தப்பிக்கக்கூடிய மேம்பட்ட 'ஸ்டெல்த்' தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும். அதாவது, இந்த விமானம் மிகக் குறைந்த மின்காந்த அலைகளை வெளியிடுவதால், எதிரி ரேடார்களால் கண்டறிய முடியாது. அதே நேரத்தில், எதிரி விமானங்களைக் கண்டறிந்து தாக்கி அழிக்கும் மேம்பட்ட சென்சார்கள் மற்றும் ஆயுதங்களும் இதில் இருக்கிறது.
இந்த விமானம் பெரிய உள் எரிபொருள் தொட்டியைக் கொண்டிருக்கும், அதில் 6.5 டன் எரிபொருளை சேமிக்க முடியும். மேலும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை உட்பட பல்வேறு ஆயுதங்களை வைப்பதற்கான உள் ஆயுதக் களஞ்சியமும் இதில் இருக்கும். தற்போது, இந்த திட்டத்தின் மொத்த செலவு சுமார் ரூ15,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏ.எம்.சி.ஏ எம்.கே.1 (AMCA Mk1) விமானம் தற்போதுள்ள 90kN திறன் கொண்ட GE 414 எஞ்சினில் பறக்கும். அதே நேரத்தில், ஏ.எம்.சி.ஏ எம்.கே.1 (AMCA Mk2) விமானம் DRDO-வின் கேஸ் டர்பைன் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு வெளிநாட்டு பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டிலேயே உருவாக்கும் 110kN திறன் கொண்ட சக்திவாய்ந்த எஞ்சினில் இயங்கும்.
முன்னதாக, ஏ.டி.ஏ (ADA) அதிகாரிகள் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்த ஐந்து வருடங்களுக்குள் முதல் ஏ.எம்.சி.ஏ (AMCA) விமானத்தின் சோதனைப் பறப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
இந்த விமானத்தின் முழு மேம்பாட்டு காலமும் சுமார் 10 ஆண்டுகள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் கட்டமாக ஐந்து முன்மாதிரி விமானங்களைத் தயாரித்த பின்னரே உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமானத்தின் உற்பத்தி, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைக் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைக்கும். தற்போது அமெரிக்கா (F-22 ராப்டர் மற்றும் F-35A லைட்னிங் II), சீனா (J-20 மைட்டி டிராகன்) மற்றும் ரஷ்யா (சுகோய் Su-57) ஆகிய நாடுகளே இந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!