news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பாணந்துறையில் வர்த்தகரை கத்தியால் குத்தி வீட்டில் கொள்ளை

23 Nov, 2023
பாணந்துறை பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் இரண்டு நபர்கள் நுழைந்து அவரை கத்தியால் குத்தி காயப்படுத்தி தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (23) அதிகாலை 2 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட வர்த்தகரின் மனைவி அளித்த புகாரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். காயமடைந்த வர்த்தகர் பாணந்துறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!