news@ilakkiyainfo.com

பிரிவுகள்

பாதுகாப்பற்ற முறையில் சவப்பெட்டிகளை ஏற்றி சென்ற லொறி சிக்கியது!

06 May, 2024
சவப்பெட்டிகளை லொறியில் பாதுகாப்பற்ற முறையில் ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி பண்டாரகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . பண்டாரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகள், பண்டாரகம நகரில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த போது, இந்த லொறியை நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர் . சோதனையில் சவப்பெட்டிகள் பாதுகாப்பற்ற முறையில் அடுக்கிக் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட வாகன சாரதியிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, பாணந்துறை பகுதியிலிருந்து முல்லைத்தீவுக்கு இந்த சவப்பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது . இந்த சவப்பெட்டிகள் ஆபத்தான முறையில் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் கீழ் சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!