‘`சமையல், வீட்டைச் சுத்தம் பண்றது, துணி துவைக்கிறதுனு எல்லா வேலைகளையும் நான்தான் பண்றேன்.
‘செலிபிரிட்டீஸ் எல்லாம் பாத்திரம் தேய்ப்பாங்களா’னு யாராவது கேட்டா ஆச்சர்யமா இருக்கு. லண்டன்ல இருந்தவரை குப்பையை வெளியில கொண்டுபோய் கொட்டறதுவரை நான்தான் பண்ணியிருக்கேன்.
வீடு சுத்தமா இல்லைனா எனக்கு மூளை வேலை செய்யாது. லாக்டௌன் ஆரம்பிச்ச டைம்ல நிறைய பேர் என்கிட்ட பாத்திரம் கழுவற சேலஞ்ச்ல சேரச் சொல்லிக் கேட்டாங்க.
பாத்திரம் கழுவறதும் வீட்டைப் பெருக்கிறதும் சேலஞ்ச் கிடையாது. வீட்டை சுத்தமா வெச்சிருக்கிறது உங்க பொறுப்பு. இப்படியே போனா பல்லு தேய்க்கிற சேலஞ்ச் வந்தாலும் ஆச்சர்யமில்லை’’
- வெளுத்து வாங்குபவரின் அடுத்த எதிர்பார்ப்பு ‘லாபம்’.
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் ஷ்ருதி நடித்துள்ள அந்தப் படத்தின் டிரெய்லரே மிரட்டுகிறது.
‘`மெயின் பிக்சர் வேற லெவல். நான் நடிச்சிருக்கிற க்ளாரா கேரக்டருக்காக எக்ஸைட்மென்ட்டோடு காத்துக்கிட்டிருக்கேன்’’ என்று எதிர்பார்ப்பு ஏற்றுகிறார்.
வாரிசு நடிகையிடம் அதைக் கேட்காமல் எப்படி... `நெப்போட்டிஸம்..?'
‘`ஹாலிவுட்டையும் சேர்த்து நான் நாலு இண்டஸ்ட்ரீஸ்ல வொர்க் பண்ணியிருக்கேன். மும்பைலதான் என் முதல் படம் ரிலீஸாச்சு.
ஆனா, 11 வருஷங்களுக்குப் பிறகும் நான் சௌத் இந்தியன் நடிகைன்னு பெருமையா சொல்ல முடியும்.
இந்தி பட வாய்ப்பு வந்தா, அது பிடிச்சா நான் பண்ணுவேன். ஆனா, அது என் ஃபோகஸா எப்போதும் இருந்ததில்லை.
நம்ம ஊர்ல யாரையும் ஈஸியா அக்ஸெப்ட் பண்றதில்லை. என்னை இன்னும் அக்ஸெப்ட்டே பண்ணலையோனுகூட நினைச்சிருக்கேன்.
`3' மாதிரி படம் பண்ணா ரசிக்கிறாங்க. இன்னொரு படம் சரியில்லைங்கிறாங்க. என்ன காரணம்னு தெரியலை.
எங்கப்பா எனக்காக என்னிக்கும் யார்கிட்டயும் வாய்ப்பு கேட்டதில்லை. கேட்கவும் மாட்டார். அதனால நெப்போட்டிஸத்தின் பலன் பத்தி நான் யோசிச்சதுகூட இல்லை.
11 வருஷங்களா நான் இந்தத் துறையில நிற்கறேன்னா அது என் வேலையால மட்டும்தான். என்னால இங்கிலீஷ், இந்தி, தமிழ், தெலுங்குனு எல்லா மொழிகள்லயும் பேச முடியும்.
ஆனா, பாலிவுட்டுக்குப் போனா ‘உங்க இங்கிலீஷ் சௌத் இந்தியனா இருக்கு, நீங்க இட்லி, தோசைதானே சாப்பிடுவீங்க’ன்ற அவங்க கேள்வி எனக்குப் பிடிக்காது.
ஆனா, இப்படிப் பல பிரச்னைகள் இருக்கு. எந்த லேங்வேஜா இருந்தாலும் சரி, வேலையைச் சரியா பண்ணலைன்னா வாய்ப்பு கிடைக்காது.’’
பாலிவுட்டில் தீபிகா படுகோன், மாலிவுட்டில் பார்வதி வரிசையில் மன அழுத்தம், ஆங்ஸைட்டி பற்றி வாய்திறந்த முதல் தமிழ் ஹீரோயின் ஷ்ருதி.
பாடி ஷேமிங், பீரியட்ஸ் பெயின், பிளாஸ்டிக் சர்ஜரி எனப் பல விஷயங்களையும் பேச நிச்சயம் பெரிய தைரியம் வேண்டும்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!