இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
‘மிகவும் அதிர்ஷ்டசாலிகள்’
பெயர் வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு பிபிசியிடம் பேசிய ஒரு முன்னாள் ஜப்பானிய விமானப் பணியாளர் தப்பித்த பயணிகள் ‘மிகவும் அதிர்ஷ்டசாலிகள்’ என்றார்.
“பயணிகள் அனைவரும் காப்பாற்றப்பட்டதை அறிந்து நிம்மதியாக இருந்தது. ஆனால் ஆபத்து கால வெளியேற்ற வழிமுறைகளை நினைத்தால் பதற்றமாகவும் பயமாகவும் இருந்தது.
இந்த விபத்தில் விமானங்கள் மோதிக்கொண்ட விதத்தையும், தீ பரவியதையும் பார்க்கையில் இந்த விபத்து மிக மோசமாக இருந்திருக்கக் கூடும்,” என்கிறார் அந்தப் பெண்.
நிஜத்தில் பயணிகளை பதற்றமடையாமல் இருக்க வைப்பது மிகக் கடினம் என்ற அவர், அவர்கள் காப்பாற்றப்பட்டது கற்பனை செய்ய முடியாத அளவு கடினமானது என்றார். “இது பணியாளர்களின் மிகச்சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அவர்களின் அறிவுறுத்தலின்படி நடந்த பயணிகள் ஆகியவற்றால் சாத்தியப்பட்டது,” என்றார்.
கைகொடுத்த பயிற்சிகள்
விமானப் பணிப்பெண்கள் மூன்று வார தீவிரப் பயிற்சிக்குப் பிறகே பணியமர்த்தப்படுவார்கள் என்றார் அவர். இது ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும்.
“எழுத்துத் தேர்வு, நிஜ சம்பவங்களைப் பற்றிய விவாதங்கள், செய்முறைப் பயிற்சிகள் ஆகியவை இதில் அடக்கம். விமானம் கடலில் விழுந்தால் என்ன செய்வது, விமானத்தில் தீப்பிடித்தால் என்ன செய்வது, போன்றவை கற்றுத்தரப்படும். பராமரிப்புப் பணியாளர்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது,” என்றார் 10 வருடங்களுக்குமுன் பணியிலிருந்து விலகிய அந்தப்பெண்.
தென்கிழக்கு ஆசிய விமான நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் விமானியும் விமானப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்ட தீவிரமான பயிற்சிதான் இந்த மீட்புப் பணியில் உதவியது என்றார்.
“இங்கு பயிற்சி மிக முக்கியப் பங்காற்றியது என்று நினைக்கிறேன். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் யோசிப்பதற்கு நேரமே இருக்காது. பயிற்சியில் கற்றுக்கொண்டதைச் செயல்படுத்த மட்டுமே முடியும்,” என்றார் அவர்.
பயணிகள் விமானங்கள் சர்வதேச சான்றிதழ் பெறுவதற்கு, விமானத்தில் இருக்கும் அனைவரும் 90 வினாடிகளில் வெளியேற முடியும் என்று விமானத் தயாரிப்பாளர்கள் காண்பிக்க வேண்டும். சில சமயம் பரிசோதனை மீட்பு முயற்சிகள் உண்மையான பயணிகளை வைத்து செய்யப்படுகின்றன, என்கிறார் அவர்.
தரையிலிருந்த ஒரு பயணியும் தங்களது கைப்பைகளைக் கொண்டுவரவில்லை
கடந்த கால விபத்துகள்
கடந்த கால விபத்துகளுக்குப் பிறகு விமானப் பாதுகாப்பு நெறிமுறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் அந்த விமானி.
உதாரணமாக, 1977-ஆம் ஆண்டு ஸ்பெயினில் இரண்டு போயிங் 747 ரக விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 583 பேர் கொல்லப்பட்டனர்.
இது விமான வரலாற்றிலேயே மிக மோசமான விபத்தாகப் பார்க்கப்படுகிறது. இது விமானப் பணியாளர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து நிர்வாகிகள் ஆகியோரிடையே நடந்த தகவல் பரிமாற்றத்தில் இருந்த சிக்கல்தான் இதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து விமானத்திலிருக்கும் விமானி அறை மற்றும் ரேடியோ தொலைதொடர்பு சாதனங்கள் ஆகியவை மேம்படுத்தப்பட்டன.
1985-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஒரு விபத்தை எதிர்கொண்டது. டோக்கியோவிலிருந்து ஒசாகாவிற்குக் கிளம்பிச் சென்ற 123 என்ற விமானம், கிளம்பிய சற்றி நேரத்திலேயே ஒரு மலையில் மோதியது. அந்த விமானத்தில் பயணித்த 524 பேரில் 4 பேர் மட்டுமே உயிர்பிழைத்தனர்.
இவ்விபத்திற்கான காரணமாக போயிங் நிறுவனம் விமானத்தில் செய்த பழுதுவேலையைச் சரியாகச் செயவில்லை என்று சொல்லப்பட்டது.
2006-ஆம் ஆண்டு இந்த விபத்தின் இடிபாடுகளை வைத்து ஜப்பான் ஏர்லைன்ஸ் ஒரு அருங்காட்சியகம் அமைத்தது. இது பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டது.
“அந்த விபத்திற்குப் பின், குடும்பத்தாரை இழந்து தவித்தவர்களின் வலி, வேதனை ஆகியவற்றைப் பார்த்தபின், அதுபோன்ற ஒரு சம்பவத்தை மீண்டும் நடக்க அனுமதிக்க மாட்டோம் என்று சபதம் எடுத்துக்கொண்டோம்,” என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!