12 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனா சென்றார் வடகொரிய ஜனாதிபதி
25 Oct, 2026
பெர்சியாவிலிருந்து உருவான பாரசீக வளைகுடா ஈரான் இதற்குக் கோபப்படுவதற்கான காரணத்தையும் இங்கு அறிவோம். ஈரானின் முந்தைய பெயர், பெர்சியா என்பது ஆகும். அதனால் அந்தப் பெயரை ஈரான் விடத் தயாரில்லை. 1935ஆம் ஆண்டு, அப்போது ஈரானின் ஷாவாக இருந்த ரெசா ஷா பஹ்லவி, 'பெர்சியா' என்பது வெளியாட்களால் வழங்கப்பட்ட ஒரு புறப்பெயர் என்று கருதியதை அடுத்து, அதை மாற்றி ’ஈரான்’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாடு மட்டுமல்ல, பெர்சியாவில் வாழ்ந்த மக்களும்கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பார்சிகள் என்று அழைக்கப்பட்டனர். 'பார்ஸ்' என்ற வார்த்தையிலிருந்து இந்தப் பெயர் உருவானது. இந்தப் பெயர் பல நூற்றாண்டுகளாக பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் ஒரு பகுதியாகும். அதன்படி, இந்த பெர்சியாவிலிருந்து உருவானதே, பாரசீக வளைகுடா ஆகும்.The name Persian Gulf, like many geographical designations, is deeply rooted in human history. Iran has never objected to the use of names such as the Sea of Oman, Indian Ocean, Arabian Sea, or Red Sea. The use of these names does not imply ownership by any particular nation, but… pic.twitter.com/PQjUiph4qt
— Seyed Abbas Araghchi (@araghchi) May 7, 2025
அரபு நாடுகளின் அரேபிய வளைகுடா
எனினும், இந்தப் பெயருக்கு அப்போது முதலே சில அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
அவைகள், அரேபியா என்று அழைக்கப்பட வேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றன.
அதற்கான நீண்ட வரலாற்றையும் அந்நாடுகள் கொண்டுள்ளன. குறிப்பாக, பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய அனைத்து நாடுகளும் நீர்நிலையைக் கொண்டிருக்கின்றன. இதில் ஈரானைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் 'அரேபிய வளைகுடா' அல்லது 'வளைகுடா' என்ற பெயர்களைப் பயன்படுத்துகின்றன.
மறுபுறம் பல தசாப்தங்களாக, தெஹ்ரான் கிட்டத்தட்ட அனைத்து அரபு நாடுகளுடனும் இந்தப் பெயருக்காகப் போட்டியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு, ஈராக் பிராந்தியத்தின் முதன்மை கால்பந்து போட்டியை 'அரேபிய வளைகுடா கோப்பை' என்று பெயரிட்டது.
இந்தச் செயல் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தெஹ்ரான், ஈராக் தூதரை அழைத்து முறையான எதிர்ப்பை பதிவு செய்தது. அடுத்து, கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் எர்த் ஆகியவற்றில் நீர்நிலையைப் பெயரிடாமல் விட்டதற்காக ஈரான் 2012ஆம் ஆண்டு கூகுள் மீது வழக்குத் தொடர்ந்தது.
இன்றுவரை, கூகுள் அதை இரண்டு பெயர்களிலும் - 'பாரசீக வளைகுடா (அரேபிய வளைகுடா)' என்று பெயரிட்டு வருகிறது.
இதன் காரணமாகவே, அதன் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கெனவே, ஈரானுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் ட்ரம்ப், இதர அரபு நாடுகளுக்காக அந்தப் பெயரை மாற்றவும் வாய்ப்பிருக்கிறது வல்லுநர்கள் கருதுகின்றனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!