பாராளுமன்றத்திற்கு அருகில் இன்று (03) சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெலவத்த ராஜகிரிய வீதியில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தலங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அதிக வேகத்துடன் பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வேன் ஒன்றுடன் மோதி பின்னர் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றள்ளது.
இதன்போது, நான்கு இளைஞர்கள் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞான பட்டதாரி நிறுவனத்திற்கு சொந்தமான வேன் ஒன்றுடன் கார் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கார் இரண்டாக உடைந்தது. படுகாயமடைந்த ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்..
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!