இதயத்தில் அடைப்பு ஏற்பட்டாலே கட்டாயம் ஆஞ்சியோபிளாஸ்டி வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்
16 Oct, 2026
தமிழ் இளைஞர்களுக்கு,
இரண்டு இளைஞர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெண்ணைப் பற்றி பேசும்போது, அவளது குணம் விமர்சிக்கப்படுவதை பலரும் கேட்டிருக்க முடியும். அப்படி விமர்சிக்கப்படுவது குறித்து வியப்பதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை. இதுபோன்ற உரையாடல்கள் அடிக்கடி நிகழும். தமிழ் சமுதாயத்தில் மட்டுமல்ல, இந்த மாதிரியான உரையாடல்களை பல இடங்களில் கேட்க முடியும்.
சீதை போன்ற ஒரு மனைவிதான் வேண்டுமா?
சில நேரங்களில், எங்கள் கோபம் கண்களை மறைக்காமல் இருக்கும் பட்சத்தில், உங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆண்களில் பலர் ராமாயணத்தில் வரும் அடக்கமான சீதாபிராட்டியின் கதைகளை கேட்டு வளர்ந்திருப்பீர்கள். எனவே, "நடத்தை குறித்த சந்தேகம் எழும்போதெல்லாம், தீயில் விழுந்து தன் கற்பை நிரூபிக்கும் சீதை மாதிரியான மனைவியை ஒருநாள் திருமணம் செய்யக்கூடும்" என்று நினைத்தே வளர்ந்திருப்பீர்கள்.
அடக்கமான பெண்களுக்கும் பாலியல் ஆசை உண்டு
சூப்பர்ஹிட் படமான படையப்பா திரைப்படத்தில், பெண்களை மூன்று விதமாக பிரிக்க முடியும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பார். அவரின் கருத்துப்படி ஒருசில பெண்கள் தெய்வங்களைப் போல என்றும், ஒரு பிரிவைப் பார்த்தால் காம உணர்வு தோன்றும் என்றும், வேறுசில பெண்களை பார்க்கும்போது பயம் உண்டாகும், என மூன்று வகையாக அவர்களை பிரித்திருப்பார். பாலியல் ஆசையை வெளிப்படுத்தும் நீலாம்பரியை விடுத்து, குடும்பப் பாங்கான, அப்பாவிப் பெண்ணான சௌந்தர்யாவைத்தான் படையப்பா தேர்ந்தெடுப்பார். அதை நீங்களும் கைதட்டி வரவேற்றிருப்பீர்கள்.பாலியல் சுதந்திரம் இருபாலருக்குமானது
ஆனால் ஆண்களுக்கு இவ்வாறு இல்லை. டேட்டிங் செய்வது, பெண்களுடன் இருப்பது போன்ற விவகாரங்களில் ஆண்களுக்கு முழு பாலியல் சுதந்திரம் உண்டு. ஆண்களுக்கு மட்டுமே வாழ்க்கையை அனுபவிக்கும் உரிமை இருப்பது போலும், இந்த உரிமைகள் குறித்து கேள்வி கேட்பது இழிவானது போலவும், நீங்கள் என்ன செய்தாலும் பெண்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இங்குள்ளது. உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றை சொல்கிறோம். பொறுமையாக கேளுங்கள். பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளும் ஆசைகளும் உண்டு.
கற்பை வைத்து பெண்ணை வரையறுக்க வேண்டாம்
அடக்கமான பெண்தான் நல்ல குணம் கொண்ட பெண்ணாக இருக்க முடியும் என்ற மோசமான சிந்தனையை அழித்து விடுங்கள். பாலியல் ஆசை அதிகம் உள்ள பெண்கள் பலர், புத்திசாலியாகவும், உதவி செய்யும் குணமும், அன்பாகவும், மேலும் நேர்மையான பண்புகளோடும் இருக்கிறார்கள்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!